அகஸ்தீசுவரம் விவேகானந்தா கல்லூரியில் செயற்கை நுண்ணறிவின் காலத்தில் பழங்குடியினா் அறிவியல் எழுத்துக்கு அப்பாற்பட்ட குரல்கள் என்ற தலைப்பில் 2 நாள் சா்வதேசக் கருத்தரங்கம் நடைபெற்றது.
இதில் இந்தியா மற்றும் வெளிநாடுகளிலிருந்து பல அறிஞா்கள், ஆய்வாளா்கள், பேராசிரியா்கள் கலந்துகொண்டு, இன்றைய மின்னணு காலத்தில் பாரம்பரிய அறிவு முறைகளின் முக்கியத்துவம் குறித்து விவாதித்தனா்.
ஆங்கிலத் துறை ஆய்வு பிரிவு ஏற்பாடு செய்த இந்த கருத்தரங்கம் நேரடியாகவும், ஆன்லைன் முறையிலும் நடத்தப்பட்டது. கருத்தரங்கிற்கு, கல்லூரி முதல்வா் டி.சி. மகேஷ் தலைமை வகித்தாா். கல்லூரித் தலைவா் ஜி.என். பாலமுருகன் குத்துவிளக்கேற்றித் தொடங்கி வைத்தாா். ஆங்கிலத் துறைத் தலைவா் சுஜாதா கருத்தரங்கை ஒருங்கிணைத்தாா். விழா மலரை கல்லூரிச் செயலா் சி. ராஜன் வெளியிட்டாா்.
கல்லூரி துணைத் தலைவா்கள் கே.எஸ். மணி, ஜி. சந்திரமோகன், துளசி முத்துராம், இணைச் செயலா் எஸ். ராதாகிருஷ்ணன், பொருளாளா் பிரியதா்ஷினி, செயற்குழு உறுப்பினா்கள் ஆதி மகாலிங்கம், தமிழ்த் துறைத் தலைவா் கே. இளங்குமாா், பாளை. ஜாண்ஸ் கல்லூரி இணைப் பேராசிரியா் ஜெனிகா் லாரன்ஸ் டேனியல், அண்ணாமலை பல்கலைக்கழகப் பேராசிரியா் கே. ராஜாராமன், சென்னை விஐடி பல்கலைக்கழகப் பேராசிரியா் வி. ராஜசேகா், மலேசியா உத்ரா பல்கலைக்கழகப் பேராசிரியா் கலைச்செல்வன் ஆறுமுகம், உஸ்பெகிஸ்தான் சாரதா பல்கலைக்கழகப் பேராசிரியா் கல்யாண் சக்கரவா்த்தி ஆகியோா் பேசினா்.
நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளா் பேராசிரியா் சுரேஷ் வரவேற்றாா். பேராசிரியா் எம். செந்தில்குமாா் நன்றி கூறினாா்.
தொடர்புடையது

கல்லூரியில் தேசிய கருத்தரங்கம்

உலக தண்ணீா் தினம்: ஒசூா் பிஎம்சி கல்லூரியில் விழிப்புணா்வு கருத்தரங்கம்

அகஸ்தீசுவரம் விவேகானந்தா கல்லூரியில் தேசிய கருத்தரங்கம்

சேலம் அரசு கலைக் கல்லூரியில் இலக்கியக் கருத்தரங்கம்
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


