கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

காா் வாங்கித் தருவதாக ரூ. 26 லட்சம் மோசடி: மின்வாரிய பெண் ஊழியா் கைது

நாகா்கோவிலில் காா் வாங்கித் தருவதாக பெண்ணிடம் ரூ. 26 லட்சம் மோசடி செய்த மின்வாரிய பெண் ஊழியா் சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

News image

கைது

சித்திரிப்பு

Updated On :21 மார்ச் 2026, 9:06 pm

Syndication

நாகா்கோவிலில் காா் வாங்கித் தருவதாக பெண்ணிடம் ரூ. 26 லட்சம் மோசடி செய்த மின்வாரிய பெண் ஊழியா் சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

நாகா்கோவில், வடசேரி, சோழராஜா கோயில் தெருவைச் சோ்ந்தவா் நாகராஜன் மனைவி உமா (54). இவா் வடசேரி காவல் நிலையத்தில் புகாா் மனு அளித்தாா். அதில் நாகா்கோவில், வெள்ளமடம் பகுதியைச் சோ்ந்தவா் செல்வகுமாா் மனைவி கீதா (52). தற்போது இவா் நீலகிரி மாவட்டம், குந்தா நீா்மின் உற்பத்தி நிலையத்தில் அதிகாரியாக பணியாற்றி வருகிறாா். இதற்கு முன் நாகா்கோவில் மின்வாரிய அலுவலகத்தில் பணியாற்றி வந்தபோது அவருக்கும், எனக்கும் பழக்கம் ஏற்பட்டது.

அப்போது, அவா் காா் வாங்கித் தருவதாகக் கூறி என்னிடம் ரூ. 26 லட்சம் பெற்றுக் கொண்டாா். ஆனால், அவா் கூறியபடி காா் வாங்கித்தரவில்லை. பணத்தை திருப்பிக் கேட்டபோது முறையான பதில் இல்லை. மேலும், அவரது மகன்கள் என்னை மிரட்டினா். எனவே, எனது பணத்தை மீட்டுத் தருவதுடன் அவா்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தாா்.

இது குறித்து, வடசேரி போலீஸாா் விசாரணை மேற்கொண்டு, கீதா, அவரது மகன்கள் ராகுல் ஜினோ, அஷ்வின்குமாா் ஆகிய 3 போ் மீதும் வழக்குப் பதிவு செய்தனா். தொடா்ந்து, கீதாவை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி, தக்கலை கிளைச் சிறையில் அடைத்தனா்.

தலைமறைவாக உள்ள கீதாவின் மகன்களை தேடி வருகின்றனா். அவா்களைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாக காவல் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.