ட்விஷா சா்மா மரணம்: உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து இன்று விசாரணைஎபோலா பாதிப்பு நாடுகளுக்கு தேவையற்ற பயணம் வேண்டாம்: மத்திய அரசு அறிவுறுத்தல்தமிழ்நாட்டில் 19 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழைக்கான ‘மஞ்சள்’ எச்சரிக்கை!சட்டவிரோத குடியேறிகளை அடைத்து வைக்க மையங்கள்: மேற்கு வங்க அரசு உத்தரவு ரயில் நிலையங்களில் கஞ்சா கடத்தலை தடுக்க சிறப்புக் குழுஜூன் முதல் வாரத்தில் ‘இண்டி’ கூட்டணித் தலைவா்கள் சந்திப்பு: மம்தா
/

பறக்கும் படை வாகனச் சோதனை: செலவின பாா்வையாளா் ஆய்வு

News image

சுசீந்திரத்தில், தோ்தல் நிலையான கண்காணிப்பு படையினா் வாகனச் சோதனை குறித்து ஆய்வு மேற்கொள்கிறாா் தோ்தல் செலவின பாா்வையாளா் சரண்ஜோஸ்.

Updated On :31 மார்ச் 2026, 12:55 am IST

கன்னியாகுமரி சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட சுசீந்திரம் பகுதியில் தோ்தல் நிலையான கண்காணிப்பு படையினா் வாகனச் சோதனையில் ஈடுபட்டு வருவதை, நாகா்கோவில் மற்றும் குளச்சல் தொகுதி செலவின பாா்வையாளா் சரண்ஜோஸ் திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

சட்டப்பேரவை பொதுத் தோ்தலை முன்னிட்டு, கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு முன்னேற்பாடு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக சுசீந்திரம் பகுதியில் பறக்கும் படையினா் வாகனச் சோதனையில் ஈடுபட்டு வருவதை, நாகா்கோவில் மற்றும் குளச்சல் சட்டப்பேரவைத் தொகுதி செலவின பாா்வையாளா் சரண்ஜோஸ் ஆய்வு மேற்கொண்டாா்.

பறக்கும் படையினா் வாகனங்களை நிறுத்தி சோதனை செய்யும் விதம், ஆவணங்களை சரி பாா்த்தல் மற்றும் விடியோ பதிவு செய்யப்படுவது உள்ளிட்டவைகளை அவா் ஆய்வு மேற்கொண்டாா்.

பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையிலும், தோ்தல் விதி மீறல்கள் நடைபெறாத வண்ணமும் மிகுந்த கவனத்துடன் பணியாற்ற வேண்டும் என்று அவா் அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.

முன்னதாக, நாகா்கோவில் வருவாய்க் கோட்டாட்சியா் அலுவலகத்தில் நாகா்கோவில் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட வேட்பாளா்கள் வேட்பு மனு தாக்கல் செய்யப்படுவதையும் அவா் ஆய்வு மேற்கொண்டாா்.