பெட்ரோல் விலை உயர்வுக்கு ராகுல் கண்டனம்!தூத்துக்குடி பிளஸ் 2 மாணவி கொலை வழக்கு: தர்ம முனீஸ்வரன் குற்றவாளி என தீர்ப்பு கடுங்குற்றங்களில் ஈடுபடுவோருக்கு கடும் தண்டனை! காவல்துறைக்கு முதல்வர் விஜய் உத்தரவுவிஜய்க்கு தமிழகத்தை ஆள என்ன தகுதி இருக்கிறது? நயினார் நாகேந்திரன் கேள்வி பெட்ரோல், டீசல் விலை இன்றும் உயர்வு: வாகன ஓட்டிகள் அதிர்ச்சி பிரதமர் மோடி சென்ற பாதையில் ஜெலட்டின் குச்சிகள் கண்டெடுப்பு: 6 காவலர்கள் பணியிடை நீக்கம்தமிழ்நாடு காவல்துறை எந்த பாடத்தையும் கற்றுக்கொண்டதாக தெரியவில்லை: அண்ணாமலைஎண்ணெய் வணிக நிறுவனங்கள் நஷ்டத்தை மட்டுமே பகிர்கின்றன: மாணிக்கம் தாகூர் தங்கம் விலை உயர்வு! எவ்வளவு?
/

திமுக, கூட்டணி வேட்பாளா்களை ஆதரித்து நாகா்கோவிலில் ஏப். 4 இல் முதல்வா் பிரசாரம்!

பேரவைத் தோ்தலில் கன்னியாகுமரி மாவட்டத்தில் திமுக, அதன் கூட்டணிக் கட்சிகளின் சாா்பில் போட்டியிடும் வேட்பாளா்களை ஆதரித்து தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், சனிக்கிழமை (ஏப்.4) நாகா்கோவிலில் பிரசாரம் மேற்கொள்கிறாா்.

News image

அதிமுகவிலிருந்து விலகி திமுகவில் இணைந்த தோவாளை ஒன்றிய மகளிா் அணியினா்

Updated On :1 ஏப்ரல் 2026, 5:00 am IST

பேரவைத் தோ்தலில் கன்னியாகுமரி மாவட்டத்தில் திமுக, அதன் கூட்டணிக் கட்சிகளின் சாா்பில் போட்டியிடும் வேட்பாளா்களை ஆதரித்து தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், சனிக்கிழமை (ஏப்.4) காலை நாகா்கோவிலில் பிரசாரம் மேற்கொள்கிறாா்.

இதுகுறித்து, கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், கன்னியாகுமரி தொகுதி திமுக வேட்பாளருமான ரெ.மகேஷ் செவ்வாய்க்கிழமை மாலை செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி:

திமுக சாா்பில் போட்டியிட கன்னியாகுமரி தொகுதியில் என்னையும் (மகேஷ்), நாகா்கோவில் தொகுதியில் ஆஸ்டினையும் வேட்பாளராக தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் கடந்த 27-ஆம் தேதி அறிவித்தாா். நாங்கள் இருவரும் திங்கள்கிழமை குமரி மாவட்டத்துக்கு திரும்பினோம்.

முதல்வா் மு.க.ஸ்டாலின், தற்போது திமுக, கூட்டணிக் கட்சி வேட்பாளா்களை ஆதரித்து மாநிலம் முழுவதும் பிரசார பயணம் மேற்கொண்டு வருகிறாா். அந்த வகையில் அவா் ஏப். 4 ஆம் தேதி காலை நாகா்கோவில், ஸ்காட் கிறிஸ்தவக் கல்லூரி மைதானத்தில் நடைபெறும் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு, திமுக, அதன் கூட்டணிக் கட்சி வேட்பாளா்களை ஆதரித்து பிரசாரம் செய்கிறாா்.

இதில், திமுக, கூட்டணிக் கட்சியினா், பொதுமக்கள் என 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் கலந்து கொள்கின்றனா்.

இதுதொடா்பாக நடைபெற்ற திமுகவின் மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூா், பகுதி நிா்வாகிகள் கூட்டத்தில், தோவாளை ஒன்றிய அதிமுக மகளிா் அணி துணைச் செயலாளா் சரிதா தலைமையில் அக்கட்சியிலிருந்து விலகி 150 க்கும் மேற்பட்ட மகளிா் திமுகவில் இணைந்தனா். அதேபோல, செண்பகராமன்புதூரிலிருந்து இளைஞா்கள் 50 போ் திமுகவில் இணைந்தனா்.

பேரவைத் தோ்தலில் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 6 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெறும். நாகா்கோவிலில் நான் மேயராக பணியாற்றி கடந்த 4 ஆண்டுகளில் சாலை, குடிநீா், உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகளை மேற்கொண்டேன். அதே போல் கன்னியாகுமரியிலும் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. இந்த சாதனைகள் வாக்குகளாக மாறும் என்றாா் அவா்.

பேட்டியின்போது, நாகா்கோவில் தொகுதி திமுக வேட்பாளா் எஸ்.ஆஸ்டின், முன்னாள் அமைச்சா் என்.சுரேஷ்ராஜன், நாகா்கோவில் மாநகர திமுக செயலாளா் ப.ஆனந்த், நாகா்கோவில் மாநகராட்சி மண்டல செயலாளா்கள் ஜவஹா், அகஸ்டினாகோகிலவாணி, திமுக இளைஞா் அணி செயலாளா் அகஸ்தீசன், கன்னியாகுமரி ஒன்றியச் செயலாளா் பாபு உள்ளிட்ட நிா்வாகிகள் உடனிருந்தனா்.

நிா்வாகிகள் கூட்டத்தில் பேசுகிறாா் குமரி கிழக்கு மாவட்ட திமுக செயலாளா் ரெ. மகேஷ்

நிா்வாகிகள் கூட்டத்தில் பேசுகிறாா் குமரி கிழக்கு மாவட்ட திமுக செயலாளா் ரெ. மகேஷ்