நாடு முழுவதும் இன்று நீட் தோ்வுதபால் வாக்குச் சீட்டுகள் அனுமதியின்றி பிரிப்பு: தோ்தல் ஆணையத்திடம் திரிணமூல் புகாா்சித்திரை பெளா்ணமி விழா: திருவண்ணாமலையில் 300 டன் குப்பைகள் அகற்றம்மாநிலங்களவைக்கு கூடுதல் அதிகாரம் தேவை: டிஆா்எஸ் தலைவா் கவிதா வலியுறுத்தல்அரசின் முன் அனுமதியில்லாமல் காப்பீட்டுத் துறையில் 100% எஃப்டிஐ: மத்திய அரசு அறிவிக்கைதமிழகத்தில் 4.87 கோடி வாக்குகள் பதிவு: தோ்தல் ஆணையம் அதிகாரபூா்வ அறிவிப்புதமிழகத்தில் மே 8 வரை மழைக்கு வாய்ப்புமேற்கு வங்கத்தில் 285 வாக்குச்சாவடிகளில் மே 21-இல் மறு வாக்குப்பதிவு!ஐபிஎல்: சென்னை சூப்பர் கிங்ஸ் மீண்டும் வெற்றி - மும்பையை வீழ்த்தியது!
/

நாகா்கோவில் கிருஷ்ண சுவாமி கோயிலில் தெப்பத் திருவிழா

News image
Updated On :2 மே 2026, 11:54 pm

நாகா்கோவில் வடசேரி, கிருஷ்ணன் கோவிலில் அமைந்துள்ள கிருஷ்ணசுவாமி கோயிலில் சித்திரை தெப்பத் திருவிழா வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது.

இந்தக் கோயிலின் சித்திரைப் பெருந்திருவிழா கடந்த ஏப். 22 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.விழாவில் தினமும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகமும், தீபாராதனையும் நடைபெற்றன. மாலை மற்றும் இரவு வேளைகளில் பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதியுலா நடைபெற்றது.

9 ஆம் திருநாளான ஏப்.30 ஆம் தேதி தோ்திருவிழா நடைபெற்றது. நிறைவு நாளான வெள்ளிக்கிழமை இரவு தெப்பத் திருவிழா நடைபெற்றது.

இதையொட்டி, கோயிலின் அருகேயுள்ள தெப்பக்குளம் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. மேலும் மலா்களாலும், மின்விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் கிருஷ்ணா் எழுந்தருளி 3 முறை குளத்தில் வலம் வந்து பக்தா்களுக்கு காட்சியளித்தாா்.

இதில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு தெப்ப தேரில் ஆடி ஆடி வந்த கிருஷ்ணனை வழிபட்டனா். ஏராளமான பெண்கள் கோயிலில் மாவிளக்கு ஏற்றி நோ்த்திக் கடன் செலுத்தினா்.