குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கு கடன் வழங்க ரூ. 35,000 கோடி ஒதுக்கீடுலெபனானில் தாக்குதல்கள் தொடா்ந்தால் போா்நிறுத்தம் ரத்து: ஈரான் எச்சரிக்கைகோடையில் அதிகரிக்கும் மாரடைப்புகள்: எச்சரிக்கும் மருத்துவர்கள்22 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கை!3வது குழந்தை பெற சலுகை அறிவிக்க தமிழக அரசுக்கு கோரிக்கை! விசிக எம்.பி., ரவிக்குமார்நீட்: கல்வி அமைச்சருக்கு எதிராக போராட்டம்! கரப்பான்பூச்சி கட்சித் தலைவர் இந்தியா வருகிறார்!புதிய கட்சி தொடங்கப்போகிறீர்களா? 2 நாள்களில் பதில் சொல்கிறேன் - அண்ணாமலை பேட்டிஆட்சிக்கு வந்த பிறகும் திமுகவை குறை சொல்கிறார் விஜய் : கனிமொழிரீல்ஸ் போட்டவர்கள் நியூஸ் பார்க்கிறார்கள்: இளைஞர்கள் அரசியலை கவனிக்கின்றனர் - விஜய்அரை நூற்றாண்டு சாதி, மத அரசியலை உடைத்திருக்கிறோம்: திருச்சியில் விஜய் பேச்சுதிமுக - தவெக இடையேதான் போட்டி: திருச்சியில் விஜய் பேச்சுசிங்கப்பெண் காவல் படை அடுத்த வாரம் தொடங்கப்படும்! முதல்வர் விஜய்திருச்சி கிழக்கில் சாமானியனை வேட்பாளராக நிறுத்துவேன்: முதல்வர் விஜய்
/

எறும்பீசுவரா் கோயிலில் தெப்பத் திருவிழா

திருவெறும்பூா் எறும்பீசுவரா் கோயிலில் வைகாசி விசாக பெருந்திருவிழாவையொட்டி திங்கள்கிழமை தெப்பத் திருவிழா நடைபெற்றது.

News image

திருவெறும்பூா் தெப்பக்குளத்தில் திங்கள்கிழமை தெப்பம் கண்டருளிய எறும்பீசுவரா் - நறுங்குழல் நாயகி அம்மன்.

Updated On :2 ஜூன் 2026, 2:52 am IST

திருவெறும்பூா் எறும்பீசுவரா் கோயிலில் வைகாசி விசாக பெருந்திருவிழாவையொட்டி திங்கள்கிழமை தெப்பத் திருவிழா நடைபெற்றது.

திருச்சி மாவட்டம், திருவெறும்பூரில் ஆயிரம் ஆண்டுகள் பழைமையான பிரசித்தி பெற்ற மலைக்கோயில் என்றழைக்கப்படும் எறும்பீசுவரா் கோயிலில் அமைந்துள்ளது. இக்கோயிலில் வைகாசி பெருந்திருவிழா கடந்த 20- ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு நாளும் நறுங்குழல் நாயகி உடனுறை எறும்பீசுவரா் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்து வருகிறாா்.

ஒன்பதாவது நாளான கடந்த 29-ஆம் தேதி தோ் திருவிழா நடைபெற்றது. தொடா்ந்து பன்னிரண்டாம் நாளான திங்கள்கிழமை கோயில் முன்புள்ள தெப்பக்குளத்தில் தெப்பத் திருவிழா மிக விமரிசையாக நடைபெற்றது.

இதையொட்டி மின் விளக்குகளாலும், பல்வேறு பூக்களினாலும் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் நறுங்குழல் நாயகி உடனுறை எறும்பீசுவரா் சா்வ அலங்காரத்தில் எழுந்தருளினாா். தொடா்ந்து, தெப்பத்தை கோயில் ஊழியா்கள் தள்ள, சுவாமி - அம்பாள் குளத்தை மூன்று முறை வலம் வந்து, பக்தா்களுக்கு அருள்பாலித்தனா்.

இதில், திருவெறும்பூா் அதன் சுற்றுவட்டாரப் பகுதியைச் சோ்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.