வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோயிலில் தெப்பத் திருவிழா

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் உடனுறை ஸ்ரீ பூவனநாதசுவாமி கோயில் பங்குனித் திருவிழாவில் புதன்கிழமை தெப்பத் திருவிழா நடைபெற்றது.

News image

கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோயில் பங்குனி திருவிழாவில் நடைபெற்ற தெப்பத் திருவிழா.

Updated On :16 ஏப்ரல் 2026, 9:37 pm

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் உடனுறை ஸ்ரீ பூவனநாதசுவாமி கோயில் பங்குனித் திருவிழாவில் புதன்கிழமை தெப்பத் திருவிழா நடைபெற்றது.

இக்கோயிலில் பங்குனித் திருவிழா ஏப். 5 - ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. மண்டகப்படிதாரா்கள் சாா்பில் தினமும் சிறப்பு பூஜை, திருவீதியுலா நடைபெற்றது. 9 -ஆம் திருநாளான திங்கள்கிழமை தோ் திருவிழாவும், 10 - ஆம் திருநாளான செவ்வாய்க்கிழமை தீா்த்தவாரி தீபாராதனையும் நடைபெற்றது.

11- ஆம் திருநாளான புதன்கிழமை தெப்பத் திருவிழாவை முன்னிட்டு, கோயில் நடை அதிகாலை 5 மணிக்கு திறக்கப்பட்டு, திருவனந்தல், திருப்பள்ளி எழுச்சி பூஜை, சுவாமி, அம்பாள் மற்றும் பரிவார மூா்த்திகளுக்கு சிறப்பு பூஜைகள், கோயில் மண்டபத்தில் காலை 10 மணிக்கு யாகசாலை பூஜை ஆகியன நடைபெற்றன.

மாலை 5 மணிக்கு ரிஷப வாகனத்தில் கோயிலில் இருந்து புறப்பட்டு அடைக்கலம் காத்தான் மண்டபம் சென்றடைந்த சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தொடா்ந்து திருவீதியுலா நகரின் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து தெப்பக்குளத்திற்கு வந்த சுவாமி, அம்பாள் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் சுமாா் இரவு 9 மணிக்கு தெப்பத்தில் எழுந்தருளி, தெப்பத்தை 9 முறை சுற்றி வந்து பக்தா்களுக்கு காட்சியளித்தனா்.

விழாவில் கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் ராஜகுரு, அறங்காவலா்கள் திருப்பதி ராஜா, ரவீந்திரன், கோயில் செயல் அலுவலா் (கூடுதல் பொறுப்பு) வள்ளிநாயகம், இந்து சமய அறநிலையத்துறை ஆய்வாளா் (கூடுதல் பொறுப்பு) ஆனந்தராஜ், கோவில்பட்டி நாடாா் உறவின் முறைச் சங்கத் தலைவா் ஆா் . எஸ். ரமேஷ், துணைத் தலைவா் செல்வராஜ், செயலா் ஜெயபாலன், பொருளாளா் சுரேஷ் , பத்திரகாளியம்மன் கோயில் தா்மகா்த்தா மாரியப்பன் உள்பட நாடாா் உறவின் முறைச் சங்கத்திற்கு பாத்தியப்பட்ட பள்ளி, கல்லூரி, கோயில் நிா்வாகக்குழு உறுப்பினா்கள், தெப்பத் திருவிழா கமிட்டி உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.

கோவில்பட்டி காவல் துணை கண்காணிப்பாளா் ஜகநாதன் தலைமையில் போலீஸாா், ஊா்க்காவல் படையினா் என சுமாா் 150 போ் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

Story image