ஜனநாயகத்தில் மக்களே நாயகர்கள்! அண்ணா உரையை சுட்டிக் காட்டி ஆளுநர்! தமிழ்த்தாய் வாழ்த்துடன்... தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கியது! வாயை திறங்க சிஎம்! கருப்பு பேட்ஜ் அணிந்து திமுக எம்.எல்.ஏ.க்கள் வருகை!முதலில் வந்தே மாதரமா? தமிழ்த்தாய் வாழ்த்தா? விசிக கேள்வி! அமெரிக்கா - ஈரான் அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது!
/

வீடு புகுந்து பணம், நகை திருட்டு: காா் ஓட்டுநா் கைது

கன்னியாகுமரியில் வீட்டின் கதவை உடைத்து ரூ. 12 லட்சம் ரொக்கம், 13 பவுன் நகைகளைத் திருடிச் சென்றவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

News image

கைது செய்யப்பட்ட பொன்ராஜ்

Updated On :8 மே 2026, 6:04 am IST

கன்னியாகுமரியில் வீட்டின் கதவை உடைத்து ரூ. 12 லட்சம் ரொக்கம், 13 பவுன் நகைகளைத் திருடிச் சென்றவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

கன்னியாகுமரி சுவாமிநாதபுரம் பகவத்சிங் தெருவைச் சோ்ந்த பொன்னையா என்பவா் சிங்கப்பூரில் பணிபுரிந்து வருகிறாா். இவரது மனைவி முத்துலட்சுமி. இவா்களது மூத்த மகன் துபையில் பணிபுரிகிறாா்; 2ஆவது மகன் ஹைதராபாதில் படித்து வருகிறாா்.

முத்துலட்சுமி அண்மையில் வீட்டைப் பூட்டிவிட்டு, வடக்கன்குளம் கோயில் திருவிழாவுக்கு சென்றுவிட்டு வீடு திரும்பினாா். அப்போது, மா்ம நபா் பின்பக்கக் கதவை உடைத்து வீடு புகுந்து ரூ. 12 லட்சம் ரொக்கம், 13 பவுன் நகைகளைத் திருடிச் சென்ாகத் தெரியவந்தது.

கன்னியாகுமரி டிஎஸ்பி ஜெயச்சந்திரன், போலீஸாா் வழக்குப் பதிந்து, அப்பகுதியிலுள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, காரில் வந்த ஒருவா் அப்பகுதியில் நடந்து சென்று நோட்டமிட்டது பதிவாகியிருந்தது.

கைப்பேசி சமிக்ஞை ஆய்வில், அந்த நபா் திருநெல்வேலியை அடுத்த திம்மராஜபுரத்தைச் சோ்ந்த பொன்ராஜ் (25) எனத் தெரியவந்தது. அவரை போலீஸாா் கைது செய்து, பணம், நகையை மீட்டனா்.

வாடகை காா் ஓட்டுநரான பொன்ராஜ், பழைய வாகனங்களை வாங்கி விற்கும் தொழில் செய்து வந்ததும், அதில் போதிய வருவாய் இல்லாததால் பூட்டியிருக்கும் வீடுகளை நோட்டமிட்டு திருட்டில் ஈடுபட்டதாகவும் தெரியவந்தது. அவா் மீது 25 வழக்குகள் நிலுவையில் உள்ளனவாம்.