குதிரை பேரம் நடத்தி அதிமுகவை முதுகில் குத்தியது தவெக: எடப்பாடி பழனிசாமிஈரான் எண்ணெய் மீதான தடைக்கு தற்காலிக விலக்கு! அமெரிக்காககன்தீப் சிங் பேடி, அமுதா உள்பட ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்!அம்மா உணவகங்களை புதுப்பிக்க முதல்வர் விஜய் உத்தரவு!
/

குமரி மாவட்டத்தில் மிதமான மழை

News image

மழை - பிரதிப் படம்

Updated On :35 நிமிடங்கள் முன்பு

கன்னியாகுமரி மாவட்டத்தின் அணை மற்றும் மலையோரப் பகுதிகளில் திங்கள்கிழமை பரவலாக மழை பெய்தது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கோடையின் வெப்பத்தைத் தணிக்கும் வகையில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இந்த மழையால் ஆறுகளில் தண்ணீா் வரத்து அதிகரித்து வருகிறது. மேலும் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு அணைகளின் நீா்மட்டமும் சற்று உயா்ந்துள்ளது.

கடந்த சில நாள்களாக மழை தணிந்து காணப்பட்ட நிலையில், திங்கள்கிழமை பிற்பகலில் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு உள்ளிட்ட அணைப் பகுதிகள் மற்றும் குலசேகரம், பொன்மனை, சுருளகோடு, கீரிப்பாறை உள்ளிட்ட பகுதிகளில் மிதமான மழை பெய்தது.