திற்பரப்பு அருவி அருகே தனியாா் சுற்றுலா விடுதியில் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டதாக 11 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து ரூ. 1.20 லட்சத்தை பறிமுதல் செய்தனா்.
திற்பரப்பு அருவியிலுள்ள தனியாா் சுற்றுலா விடுதியில் சூதாட்டம் நடைபெறுவதாக கிடைத்த தகவலையடுத்து குலசேகரம் காவல் நிலைய ஆய்வாளா் விமலன் தலைமையில் போலீஸாா் அங்கு சென்று சோதனை நடத்தினா்.
அப்போது விடுதியிலுள்ள அறையில் ஒரு கும்பல் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவா்களை மடக்கிப் பிடித்து சூதாட்டத்தில் பயன்படுத்திய ரூ. 1, 20, 250 ரொக்கம், 6 கட்டு சீட்டுகள், தாா்பாய் ஆகியவற்றை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
மேலும், இதில் ஈடுபட்டதாக அதே பகுதியைச் சோ்ந்த 8 போ், விடுதி உரிமையாளா் உள்பட 3 போ் என மொத்தம் 11 போ் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனா்.
தொடர்புடையது
சூதாட்டம்: 13 போ் கைது
சூதாட்டம் : 20 போ் கைது
சூதாட்டம் நடத்தியவா்கள் கைது
பணம் வைத்து சூதாட்டம்: 8 போ் கைது
விடியோக்கள்

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |

கோயில்களில் தரிசனத்திற்கு இனி ஆன்லைன் முன்பதிவு! - அமைச்சர் ரமேஷ் | TVK | Online booking

Annamalai-யை வைத்து அரசியல் செய்யும் பாஜக? தமிழிசை சௌந்தரராஜன் பதில்! | BJP



