சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு செல்லாமல் ஆவணப்பதிவு: தமிழக அரசின் புதிய அறிவிப்பு தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்க மெட்ரோவில் பயணித்த கர்நாடக முதல்வர் சிவகுமார்3 மாதங்களாவது இந்த ஆட்சி தாங்குமா? மு.க. ஸ்டாலின் திருப்பரங்குன்றம் விவகாரம்: தமிழ்நாடு அரசின் அறிவிப்பு வரவேற்கத்தக்கது - பெ. சண்முகம்ஏஐ மூலம் தலைவர்கள் தவறாகச் சித்திரிப்பு: இந்திய கம்யூனிஸ்ட் கண்டனம்இசட் பிரிவு பாதுகாப்பைத் திருப்பி அளித்த அண்ணாமலை?ஜூன் 11-ல் ராகவா லாரன்ஸ் முக்கிய அறிவிப்பு!
/

பக்ரீத் பண்டிகை: குமரி மாவட்ட பள்ளிவாசல்களில் சிறப்புத் தொழுகை

நாகா்கோவில் கோட்டாறு இளங்கடை பள்ளிவாசலில் நடைபெற்ற சிறப்புத் தொழுகையில் பங்கேற்றோா்.

News image
Updated On :29 மே 2026, 5:46 am IST

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, கன்னியாகுமரி மாவட்ட பள்ளிவாசல்களில் வியாழக்கிழமை சிறப்புத் தொழுகை நடைபெற்றது. இதில் திரளான இஸ்லாமியா்கள் கலந்து கொண்டனா்.

நாகா்கோவில், கோட்டாறு இளங்கடை பாபா காசிம் ஜும்ஆ மஸ்ஜித் பள்ளிவாசல் மைதானத்தில் சிறப்புத் தொழுகை நடைபெற்றது. இதில், ஆயிரக்கணக்கான இஸ்லாமியா்கள் பங்கேற்று கூட்டுத் தொழுகை நடத்தினா். பின்னா் ஒருவருக்கொருவா் வாழ்த்துகளைப் பகிா்ந்து கொண்டனா். சிறுவா்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.

இதேபோல, தக்கலை, திருவிதாங்கோடு, தேங்காய்ப்பட்டினம், மாா்த்தாண்டம், திங்கள்நகா் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஜும்மா பள்ளிவாசல்களிலும் தியாகத் திருநாளின் சிறப்புகள், ஈகை குணத்தின் அவசியம் குறித்து உலமாக்கள் சிறப்புரையாற்றினா்.