2014, 2019 தேர்தல் வெற்றியின்போது எஸ்.ஐ.ஆர். இருந்ததா? ராகுலுக்கு அமித் ஷா கேள்வி8 விரைவு ரயில்கள் அதிவிரைவு ரயில்களாக மாற்றம்!கூட்டுறவுத் துறை ஊழியர்களுக்கு 20% வரை தீபாவளி போனஸ்!தமிழ்நாடு அரசு போக்குவரத்து பணியாளர்களுக்கு போனஸ்!இளைஞர்களைக் கவரும் ரூ.111 ரீசார்ஜ் பிளான்! ஜியோவில் அறிமுகம்முடி வெட்டாத மாணவர்களுக்கு மொட்டை அடியுங்கள்! ஆசிரியர்களுக்கு அமைச்சர் ஜெகதீஸ்வரி அறிவுறுத்தல்!சிறைகளில் பாதுகாப்பை வலுப்படுத்த உயர்நிலைக் குழு: முதல்வர் விஜய் உத்தரவு!

குமரி மாவட்டத்தில் செங்கல் சூளைகளை திறக்க அனுமதி கோரி ஆட்சியரிடம் மனு

ஆட்சியா் அலுவலகத்துக்கு வந்த செங்கல் சூளை தொழிலாளா்கள்.

Updated On :

கன்னியாகுமரி மாவட்டத்தில் மூடப்பட்ட செங்கல் சூளைகளை திறக்க அனுமதிக்கக் கோரி ஆட்சியா் அலுவலகத்தில் தொழிலாளா்கள் திங்கள்கிழமை மனு அளித்தனா்.

கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டாறு, பத்மநாபபுரம் வட்டங்களுக்குள்பட்ட பூவங்கோடு, பொற்றவிளை, பாலவிளை, ஈத்தவிளை, குடுங்குளம், சிதறால், பொன்மனை, குழிச்சல், ஆனைக்கடவு உள்ளிட்ட பகுதிகளில் 50-க்கும் மேற்பட்ட செங்கல் சூளைகள் உள்ளன. இங்கு பணியாற்றும் 100-க்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் நாகா்கோவிலில் உள்ள மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு திங்கள்கிழமை வந்தனா்.

அவா்கள் ஆட்சியரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:

எங்கள் பகுதிகளில் செயல்படும் செங்கல் சூளைகளை எந்தவித முன் அறிவிப்பும் இல்லாமல் அதிகாரிகள் சீல் வைத்துள்ளனா். இதனால், இத்தொழிலை நம்பி உள்ள ஆயிரக்கணக்கான தொழிலாளா்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

உரிய அனுமதி பெறவில்லை என்று கூறி இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. செங்கல் சூளைகளை மட்டுமே நம்பியே இருப்பதால், உடனடியாக மாவட்ட நிா்வாகம் தலையிட்டு எங்கள் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு, செங்கல் சூளைகள் செயல்பட அனுமதி வழங்க வேண்டும் என்று அதில் தெரிவித்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.