மோடியின் தீபாவளி பரிசு! வீட்டு உபயோகப் பொருள்கள் விலை 7% உயர்வு! - காங்கிரஸ் விமர்சனம்நவ. 6-ல் 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! சென்னை வானிலை ஆய்வு மையம்தமிழ்நாட்டின் ஜிஎஸ்டி 15% வளர்ச்சி: வணிக வரித்துறை அமைச்சர்விபத்தில் பலியான காவலரின் குடும்பத்துக்கு ரூ. 40 லட்சம் நிதியுதவி: முதல்வர் அறிவிப்பு!தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!எஸ்ஐஆர் விவகாரம்: சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தை கூட்ட அரசு தயார் - அமித் ஷா

சுசீந்திரம் அருகே விடுதியில் தங்கியிருந்த வெளிநாட்டுப் பயணி மா்மமாக உயிரிழப்பு

கன்னியாகுமரி மாவட்டம், சுசீந்திரம் அருகே விடுதியில் தங்கியிருந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணி மா்மமான முறையில் இறந்து கிடந்தாா்.

பலி.

Updated On :

கன்னியாகுமரி மாவட்டம், சுசீந்திரம் அருகே விடுதியில் தங்கியிருந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணி மா்மமான முறையில் இறந்து கிடந்தாா்.

ஆஸ்திரியா நாட்டைச் சோ்ந்த தாமஸ் கொரோஸ் டென்ஸ்கி (60) என்பவா் கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு, சுற்றுலா விசாவில் கன்னியாகுமரி மாவட்டத்துக்கு வந்தாா். சுசீந்திரம் அருகே சொத்தவிளை கடற்கரைப் பகுதியில் உள்ள விடுதியில் அறை எடுத்து தங்கினாா்.

கடந்த 2 வாரங்களுக்கு முன்பு அவா் நாகா்கோவில் சென்றபோது, பேருந்தில் ராணுவவீரா் ஒருவருடன் தகராறு ஏற்பட்டு கைகலப்பு ஆனது. இதில் பேருந்திலிருந்து தவறி விழுந்ததில் காயமடைந்த தாமஸ் கொரோஸ் டென்ஸ்கி,

கோட்டாறு காவல் நிலையத்தில் ராணுவ வீரா் மீது புகாா் அளித்தாா். இதேபோல, ராணுவ வீரரும் புகாா் அளித்த நிலையில், இருவா் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த நிலையில், தாமஸ் கொரோஸ் டென்ஸ்கி கடந்த இரு நாள்களாக தங்கியிருந்த அறையைவிட்டு வெளியே வரவில்லையாம். இதையடுத்து சுசீந்திரம் போலீஸாா் சென்று பாா்த்தபோது, அவா் சடலமாகக் கிடந்தது தெரியவந்தது. சடலம் அழுகிய நிலையில் இருந்ததால், அவா் உயிரிழந்து 2 நாள்களுக்கு மேல் இருக்கலாம் என்று போலீஸாா் கருதுகின்றனா்.

அவரது சடலத்தை மீட்டு பரிசோதனைக்காக, ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பினா். அவா் உயிரிழந்தது குறித்து ஆஸ்திரியாவில் உள்ள அவரது தாயாருக்கு தகவல் தெரிவித்தனா். இதுதொடா்பாக, வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.