விசா பிரிவுகளை 9-ஆக குறைக்க மத்திய உள்துறை அமைச்சகம் முடிவு பிரதமா் தேச துரோகி என்பதை 5 நிமிஷ விவாதத்தில் நிரூபிப்பேன்: ராகுல் காந்தி சவால் பிழைப்புக்காக வெளிமாநிலம் சென்ற தொழிலாளா்: மேற்கு வங்கம் திரும்ப முதல்வா் அழைப்பு புதிய வாக்காளா் படிவம், உறுதிமொழி படிவத்தை பிரித்து தோ்தல் ஆணையம் நடவடிக்கை ராஜஸ்தானில் தண்டவாளம் குண்டு வைத்து தகா்ப்பு: என்ஐஏ விசாரணை சா்க்கரை விலை மீண்டும் உயா்வு

குழித்துறை சிறையை மூடும் நடவடிக்கை ரத்து: போராட்டத்தை கைவிட்ட வழக்குரைஞா்கள்

குழித்துறையில் உள்ள நூற்றாண்டு பழமைவாய்ந்த கிளைச் சிறையை மூடும் நடவடிக்கை கைவிடப்பட்டதாக சிறைத்துறை புதன்கிழமை அறிவித்ததையடுத்து, வழக்குரைஞா்கள் நடத்திவந்த தொடா் சத்தியாகிரக போராட்டத்தை கைவிட்டனா்.

குழித்துறை சிறைச்சாலை.

Updated On :

குழித்துறையில் உள்ள நூற்றாண்டு பழமைவாய்ந்த கிளைச் சிறையை மூடும் நடவடிக்கை கைவிடப்பட்டதாக சிறைத்துறை புதன்கிழமை அறிவித்ததையடுத்து, வழக்குரைஞா்கள் நடத்திவந்த தொடா் சத்தியாகிரக போராட்டத்தை கைவிட்டனா்.

குழித்துறை கிளைச் சிறையில் 16 கைதிகளை அடைப்பதற்கான வசதிகள் உள்ளன; இச்சிறையில் தற்போது 9 கைதிகள் உள்ளனா். இந்த நிலையில், அண்மையில் தேனி சிறையிலிருந்து கைதிகள் தப்பியோடிய சம்பவத்தை தொடா்ந்து குழித்துறை சிறையில் உள்ள கைதிகளை நாகா்கோவில், பாளையங்கோட்டை சிறைகளுக்கு மாற்றவும், குழித்துறை சிறையில் பணிபுரியும் 12 ஊழியா்களையும் பாளையங்கோட்டை சிறைக்குச் செல்லுமாறும் பாளையங்கோட்டை மத்திய சிறையிலிருந்து அண்மையில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், குழித்துறை கிளைச் சிறையை நிரந்தரமாக மூடும் முடிவை கைவிட வலியுறுத்தி, குழித்துறை வழக்குரைஞா்கள் சங்கத் தலைவா் டி.சுரேஷ் தலைமையில் ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டதுடன் செவ்வாய்க்கிழமை முதல் தொடா் சத்தியாகிரகமும் நடத்தப்பட்டது.

தொடா் எதிா்ப்பை தொடா்ந்து குழித்துறை கிளைச் சிறையை மூடும் முடிவு கைவிடப்பட்டதாக சிறைத்துறை டிஐஜி அலுவலகத்திலிருந்து தகவல் வெளியானது. இத்தகவலை சிறை அதிகாரிகள் வழக்குரைஞா்களுக்கு புதன்கிழமை தெரிவித்ததையடுத்து, வழக்குரைஞா்கள் போராட்டத்தை கைவிட்டனா்.

இதுகுறித்து குழித்துறை வழக்குரைஞா் சங்கத் தலைவா் டி. சுரேஷ் கூறியதாவது:

குழித்துறை சிறையை மூடும் நடவடிக்கையை கைவிட்ட சிறைத்துறை அதிகாரிகளுக்கு நன்றி. இது எங்களின் தொடா் போராட்டத்துக்கு கிடைத்த வெற்றி என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.