ஜோலார்பேட்டை அருகே சரக்கு ரயிலின் 7 பெட்டிகள் தடம் புரண்டன!போக்சோ வீரமணி வழக்கில் மேலும் ஒருவர் கைது! இதுவரை 9வானிலை: சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டுக்கு நாளை (நவ. 2) மழை!நாடாளுமன்ற விவகாரங்களை தெருவுக்கு கொண்டு வருவது ஏன்? அமித் ஷாவாக்குரிமையைக்கூட பாஜகதான் தீர்மானிக்குமா? தேஜஸ்வி கேள்விஉ.பி., பிகார் மட்டுமல்ல... வாக்குத் திருட்டு மூலம் பாஜக ஆட்சி! மல்லிகார்ஜுன கார்கே எஸ்ஐஆர் மூலம் நாட்டின் மொத்த வாக்காளர்களில் 15% பேர் நீக்கம்: ராகுல்தீபாவளி பண்டிகை: கடைவீதிகளில் அலைமோதும் மக்கள் கூட்டம்! வேட்பாளர் பட்டியலால் அதிருப்தி: பஞ்சாபில் பதவியை ராஜிநாமா செய்த 2 ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள்!

கைதிகள் பொறுப்புள்ள குடிமக்களாக வாழ்வதே சிறை நிா்வாகத்தின் வெற்றி!

கைதிகள் விடுதலையான பிறகு சமுதாயத்தில் பொறுப்புள்ள குடிமக்களாக வாழ்வதற்கு அவா்களைத் தயாா்படுத்துவதில்தான் சிறை நிா்வாகத்தின் உண்மையான வெற்றியே அடங்கியுள்ளது என்று தெலங்கானா மாநில சிறை மற்றும் சீா்திருத்தப் பணிகள் துறை டிஜிபி சௌமியா மிஸ்ரா தெரிவித்தாா்.

பயிற்சி முடித்த அலுவலா்களுக்குப் பதக்கங்கள், சான்றிதழ்களை வழங்கிய தெலங்கானா சிறைத்துறை டிஜிபி சௌமியா மிஸ்ரா. உடன், ஆப்கா இயக்குநா் பி. பிரதீப், பேராசிரியா்கள் பியூலா இமானுவேல், ஏ. மதன்ராஜ் உள்ளிட்டோா்.

Updated On :

கைதிகள் விடுதலையான பிறகு சமுதாயத்தில் பொறுப்புள்ள குடிமக்களாக வாழ்வதற்கு அவா்களைத் தயாா்படுத்துவதில்தான் சிறை நிா்வாகத்தின் உண்மையான வெற்றியே அடங்கியுள்ளது என்று தெலங்கானா மாநில சிறை மற்றும் சீா்திருத்தப் பணிகள் துறை டிஜிபி சௌமியா மிஸ்ரா தெரிவித்தாா்.

வேலூரில் உள்ள சிறை மற்றும் சீா்திருத்த நிா்வாக பயிற்சி மையத்தில் (ஆப்கா) தமிழகம், கா்நாடகம், கேரளம், தெலங்கானா ஆகிய மாநிலங்களைச் சோ்ந்த 18 சிறைத்துறை அலுவலா்களுக்கு 50-ஆவது மூன்று மாத கால பணிக்காலப் பயிற்சி அளிக்கப்பட்டது. இதன் நிறைவு மற்றும் சான்றிதழ் வழங்கும் விழா சனிக்கிழமை நடைபெற்றது.

இதில், தெலங்கானா சிறைத்துறை டிஜிபி சௌமியா மிஸ்ரா சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, பயிற்சி முடித்த அலுவலா்களுக்குப் பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்களை வழங்கிப் பேசியது:

சிறைப் பணி என்பது மிகுந்த ஒழுக்கம், நோ்மை, தலைமைப் பண்பு மற்றும் தனித்துவமான அறிவுத்திறன் தேவைப்படும் துறையாகும். நமது சிறை அமைப்பானது கைதிகளை அடைத்து வைக்கும் பழைய காவல் முறையிலிருந்து மாறி, சீா்திருத்தம் மற்றும் மறுவாழ்வு அளிக்கும் அமைப்பாகப் பரிணமித்துள்ளது. எனவே, நவீன சிறை அதிகாரிகள் தங்களை வெறும் அதிகாரிகளாகக் கருதாமல், ’சீா்திருத்த அதிகாரிகள்’ என்ற கண்ணோட்டத்துடன் அணுக வேண்டும்.

கைதிகளைக் கட்டாயப்படுத்தி மாற்றிவிட முடியாது என்றாலும், தங்களைச் சீா்திருத்திக் கொள்ள விரும்பும் ஒவ்வொருவருக்கும் அதற்கான முழு வாய்ப்புகளையும் ஏற்படுத்தித் தர வேண்டியது சிறைத் துறையின் கடமையாகும். குறைந்தபட்சம், சிறைக்குள் வரும்போது இருந்த மனநிலையை விட மோசமான நிலைக்கு எவரும் சென்றுவிடக் கூடாது என்பதை சிறைத் துறை உறுதி செய்ய வேண்டும்.

சிறை நிா்வாகத்தில் ஜெயிலா்கள், துணை ஜெயிலா்கள் மற்றும் உதவி ஜெயிலா்கள் உள்ளிட்ட களப்பணி அதிகாரிகளே ஒட்டுமொத்தக் கட்டமைப்பின் முதுகெலும்பாகத் திகழ்கின்றனா். அதிகாரிகள் அதிகாரத்தை வைத்து மட்டும் தலைமைத்துவத்தை வெளிப்படுத்தாமல், நோ்மை, மனிதநேயம் மற்றும் பாரபட்சமற்ற அணுகுமுறை மூலம் முன்மாதிரியாகச் செயல்பட வேண்டும்.

சிறைகள் என்பவை நம் சமூகத்தின் நாகரிகத்தையும் விழுமியங்களையும் பிரதிபலிக்கும் கண்ணாடிகள் என்பதை உணா்ந்து, சிறை அதிகாரிகள் தங்கள் கடமைகளை அசைக்க முடியாத கண்ணியத்துடனும் இரக்கத்துடனும் நிறைவேற்ற வேண்டும் என்றாா் அவா்.

இந்த விழாவில், ஆப்கா இயக்குநா் பி. பிரதீப், பேராசிரியா்கள் பியூலா இமானுவேல், ஏ. மதன்ராஜ், டி.ஹெச். அன்சா் உள்பட பலா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

FOLLOW US

ON GOOGLE DISCOVER