சிறையில் காவலர்களை தாக்கிவிட்டு தப்ப முயலும் கைதிகளை சுட்டுப்பிடிக்க உத்தரவு!
காவலர்களைத் தாக்கிவிட்டு தப்ப முயலும் கைதிகளை சுட்டுப்பிடிக்க சிறைத்துறை டிஜிபி உத்தரவிட்டுள்ளதைப் பற்றி...

சிறைத்துறை டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.
சிறையில் காவலர்களைத் தாக்கிவிட்டு தப்ப முயலும் கைதிகளை சுட்டுப்பிடிக்க சிறைத்துறை டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவிட்டுள்ளார்.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே தேக்கம்பட்டியில் உள்ள மாவட்டச் சிறையில், ஒரே அறையில் 17 கைதிகள் அடைக்கப்பட்டிருந்தனர்.
நேற்று முன்தினம் (அக். 26) இரவு, அந்த அறையில் இருந்த கைதி ஒருவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதாகச் சிறைக் காவலர்களிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து காவலர்கள், அறையின் கதவைத் திறந்து உள்ளே சென்றபோது அங்கு மறைந்திருந்த கைதிகள், காவலர்களைத் திடீரென தாக்கிவிட்டு சிறையிலிருந்து தப்பினர்.
இதனைத் தொடர்ந்து, 17 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை தொடரும் நிலையில், 4 கைதிகளை காவல்துறையினர் மீண்டும் கைது செய்தனர். ஆட்டோவில் தப்பிக்க முயன்று க. விலக்கு பகுதியில் இருந்த மாற்றுத்திறனாளி கைதி ஒருவரை ஆட்டோ ஓட்டுநர் காவலர்களிடம் ஒப்படைத்தார்.
சிறையில் இருந்து தப்பிய கைதிகளில் மேலும் 8 பேர் பிடிபட்டனர். மலைப்பகுதியில் பதுங்கியிருந்தவர்களை டிரோன் மூலம் ஆய்வு செய்து காவல்துறையினர் சுற்றி வளைத்துப் பிடித்தனர். தப்பியோடிய 17 பேரில் 13 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்த விவகாரம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், சென்னையிலிருந்து தேனிக்கு வந்த சிறைத்துறை டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர் நேரில் ஆய்வு செய்தார்.
புழல், தேனி சிறைகளில் இருந்து கைதிகள் தப்பிய நிகழ்வை அடுத்து சிறைத்துறை டிஜிபி பல்வேறு அதிரடி உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளார்.
சிறைகளின் கண்காணிப்பு கோபுரங்களில் இனி துப்பாக்கி ஏந்திய போலீசாரைப் பணியில் ஈடுபடுத்தவும், சிறையில் இருந்து தப்ப முயற்சி, காவலர்கள் மீது தாக்குதல் போன்ற அசம்பாவிதங்களின் போது துப்பாக்கிச்சூடு நடத்தவும், சிறைகளில் இருந்து கைதிகள் தப்பி ஓடும் பட்சத்தில் சூழலுக்கு ஏற்றவாறு சுட்டுப்பிடிக்க உத்தரவு பிறப்பிக்க உள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன.
வாக்கி டாக்கி, பைனாகுலர் போன்ற உபகரணங்களுடன் சிறைக் கண்காணிப்பு கோபுரங்களில் பணியில் ஈடுபட்டு வந்த நிலையில், அவர்களுக்கான பாதுகாப்பு அதிகரிக்கப்படவுள்ளது. சிறைகளின் பாதுகாப்பு குறித்த தணிக்கை முடிந்தவுடன் அதிகாரபூர்வ உத்தரவு வெளியாகுமென எதிர்பார்க்கப்படுகிறது.
Summary
Prison Department DGP Sandeep Rai Rathore has issued orders to shoot and apprehend any prisoners who attack guards and attempt to escape from jail.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

