பிரதான நுழைவுவாயில் வழியாக கைதிகள் தப்பினர்! சிறைத்துறை விளக்கம்!
கைதிகள் தப்பியோடிய விவகாரம் குறித்து சிறைத்துறை விளக்கம் அளித்திருப்பது பற்றி...
தேக்கம்பட்டி சிறை - x
தேனி மாவட்ட சிறையில் கைதிகள் தப்பியோடிய விவகாரம் குறித்து சிறைத்துறை செவ்வாய்க்கிழமை விளக்கம் அளித்துள்ளது.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே தேக்கம்பட்டியில் உள்ள மாவட்ட சிறைச்சாலை அமைந்துள்ளது. இந்த சிறைச்சாலையில் ஒரே அறையில் இருந்த 17 கைதிகள் காவலர்களை அடித்துவிட்டு திங்கள்கிழமை இரவு தப்பிச் சென்றனர்.
இதனைத் தொடர்ந்து, 17 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வரும் நிலையில், 4 கைதிகளை காவல்துறையினர் மீண்டும் கைது செய்தனர். ஆட்டோவில் தப்பிக்க முயன்ற மாற்றுதிறனாளி கைதி ஒருவரை ஆட்டோ ஓட்டுநர் காவலர்களிடம் ஒப்படைத்தார்.
இந்த சம்பவம் குறித்து சிறைத்துறை அளித்துள்ள விளக்கத்தில் தெரிவித்திருப்பதாவது:
“தேனி தேக்கம்பட்டி சிறையில் மொத்தமுள்ள 4 பிளாக்களில் 200 கைதிகளை அடைக்க முடியும். ஆனால், 334 கைதிகள் அடைக்கப்பட்டிருந்தனர்.
இந்த நிலையில், திங்கள்கிழமை இரவு 10 மணியளவில் மூன்றாவது பிளாக்கில் அடைக்கப்பட்டிருந்த கைதி ஒருவருக்கு வலிப்பு ஏற்பட்டதாக சக கைதிகள் கூச்சலிட்டனர்.
இதனைத் தொடர்ந்து, அந்த கைதிக்கு உடல்நல பாதிப்பு ஏற்பட்டுள்ளதா எனப் பார்க்க சென்ற காவலர் ஸ்டாலின் பிரபுவை தாக்கிய கைதிகள் நிலைகுலையச் செய்துவிட்டு தப்பினர்.
தப்பிக்க முயன்ற கைதிகளை பிரதான நுழைவுவாயிலில் இருந்த காவலர்கள் தடுக்க முயற்சித்தனர். அப்போது அவர்களையும் தாக்கிவிட்டு, சாவியைப் பறித்து பிரதான நுழைவுவாயிலை திறந்து தப்பினர்.
இன்று பிற்பகல் 3 மணி வரை 5 கைதிகள் பிடிபட்டுள்ளனர். மீதமுள்ள 12 பேரைத் தேடி வருகின்றோம். கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும், பணியில் கவனக்குறைவாக இருந்ததாக 9 சிறைப் பணியாளர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தை தொடர்ந்து, தேனிக்கு வந்துள்ள சிறைத்துறை டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர் இன்று நேரில் ஆய்வு செய்தார்.
Summary
Prisoners escaped through the main entrance - Prison department explanation
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


