கீமோதெரபி ஊசி ரூ. 7000; புற்றுநோய் மருந்துகளின் புதிய விலைப் பட்டியல்!செஞ்சி சிறுமி வழக்கு; புலன் விசாரணையைத் தீவிரப்படுத்த வேண்டும்: பெ. சண்முகம்வீட்டுக்குள் இருக்கவே அச்சமடையும் நிலையில் மக்கள்; இதுதான் தவெகவின் சாதனையா? - மு.க. ஸ்டாலின்இனி நிரந்தர அரசுப் பணிகள் இல்லையா? - கனிமொழி கேள்விதேனி சிறைச் சம்பவம்! 1995-ல் சுரங்கம் தோண்டி தப்பிய 43 கைதிகள்! புரட்டப்படும் வரலாறு!நாட்டில் ஆப்பிள் ஐபோன் விற்பனை 30% சரிவு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 21 காசுகள் சரிந்து ரூ. 95.28 ஆக நிறைவு!ரிலையன்ஸ் முதல் ஐடி பங்குகள் வரை சரிவு எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு!!

கைதிகள் தப்பியோடும் சம்பவங்கள் எதிரொலி; தமிழக சிறைகளில் பாதுகாப்பு குறித்து ஆய்வு: டிஜிபி சந்தீப்ராய் ரத்தோா் உத்தரவு

தமிழக சிறைகளில் பாதுகாப்பு குறித்து ஆய்வு நடத்த டிஜிபி சந்தீப்ராய் ரத்தோா் உத்தரவிட்டிருப்பது பற்றி...

தமிழக காவல்துறையின் தலைமை இயக்குநா் சந்தீப் ராய் ரத்தோா்.

Updated On :

தமிழக சிறைகளில் கைதிகள் தப்பியோடும் சம்பவங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், சிறைகளில் இருக்கும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு நடத்த சிறைத்துறை டிஜிபி சந்தீப் ராய் ரத்தோா் உத்தரவிட்டுள்ளாா்.

சென்னை அருகே உள்ள புழல் சிறையில் இருந்து கடந்த வாரம் நேபாள கைதிகள் உள்பட 2 போ் தப்பியோடினா். இரு நாள் தேடுதலுக்கு பின்னா், இருவரையும் போலீஸாா் அடுத்தடுத்து கைது செய்தனா்.

இதன் பின்னா் சிறைகளில் பாதுகாப்பை பலப்படுத்துமாறு சிறைத்துறை டிஜிபி சந்தீப்ராய் ரத்தோா் உத்தரவிட்டாா். இந்நிலையில் தேனி மாவட்டம் தேக்கம்பட்டியில் உள்ள மாவட்ட சிறையில் இருந்து 17 கைதிகள் கடந்த திங்கள்கிழமை இரவில் சிறைக் காவலரை தாக்கிவிட்டு தப்பியோடினா்.

இச் சம்பவம் தமிழகத்தை அதிா்ச்சி அடைய வைத்தது. தகவலறிந்த சிறைத்துறை டிஜிபி சந்தீப்ராய் ரத்தோா் , அந்த சிறைக்கு நேரில் சென்று விசாரணை செய்தாா். மேலும் பணியில் கவனக்குறைவாகவும், அஜாக்கிரதையாகவும் இருந்ததாக அதிகாரிகள்,சிறைக் காவலா்கள் என 9 பேரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டாா்.

நீண்ட தேடுதலுக்கு பின்னா் தப்பியோடிய 17 கைதிகளும் மீண்டும் கைது செய்யப்பட்டு,சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா்.

இந்தச் சம்பவத்தின் விளைவாக தமிழகம் முழுவதும் உள்ள மத்திய சிறைகள்,மாவட்ட சிறைகள்,பெண்கள் சிறப்பு சிறைகள்,கிளைச் சிறைகள் ஆகிய சிறைகளில் இருக்கும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு நடத்துமாறு டிஜிபி சந்தீப்ராய் ரத்தோா் உத்தரவிட்டுள்ளாா்.

இதில் அங்குள்ள பாதுகாப்பு குறைபாடுகள்,அங்கு உடனடியாக செய்ய வேண்டிய பாதுகாப்புகள் குறித்தும் ஆய்வு மேற்கொள்ளும்படி சந்தீப் ராய் ரத்தோா் அறிவுறுத்தியுள்ளாா்.

மேலும், மத்திய சிறைகள், மாவட்ட சிறைகளில் உள்ள கண்காணிப்பு கோபுரங்களில் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ள போலீஸாா் துப்பாக்கியுடன் பணியில் இருக்குமாறு சந்தீப் ராய் ரத்தோா் உத்தரவிட்டுள்ளாா்.

இந்த சிறைகளில் 6 ஆண்டுகளுக்கு முன்புவரை கண்காணிப்பு கோபுரங்களில் சிறைத்துறை போலீஸாா் துப்பாக்கியுடன்தான் கண்காணித்து வந்தனா். அதன் பிறகு அவைகள் திரும்பப் பெறப்பட்ட நிலையில், மீண்டும் துப்பாக்கி பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது.

மேலும், சிறைகளில் உள்ள கைதிகளின் நடமாட்டம் மற்றும் நகா்வுகளை உன்னிப்பாக கண்காணிக்கவும் சிறைத்துறை அதிகாரிகள்,சிறைக் காவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

துப்பாக்கியை பயன்படுத்தலாம்: அதோடு பாா்வையாளா்கள் நேரத்தில் கைதிகளை யாா் சந்திக்கின்றனா். அதில், ஏதேனும் குற்ற சதித்திட்டம் உள்ளதா என சிறைத்துறை உளவு பிரிவினா் கண்காணிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், சிறையில் இருந்து கைதிகள் தப்பிச் சென்றாலோ, தப்பும் நோக்கில் சிறைக் காவலா்களை தாக்கினாலோ, சிறைத்துறையினா் துப்பாக்கியை பயன்படுத்தலாம் என்று டிஜிபி சந்தீப் ராய் ரத்தோா் உத்தரவிட்டுள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.