கள்ளக்குறிச்சி விவகாரம்: தவறிருந்தால் நடவடிக்கை நிச்சயம்: அமைச்சா் எஸ். ராஜேஷ்குமாா்
கள்ளக்குறிச்சி எம்எல்ஏ விவகாரத்தில் தவறி இருந்தால் காவல் துறை நிச்சம் நடவடிக்கை எடுக்கும் என்றாா் சுற்றுலாத் துறை அமைச்சா் எஸ். ராஜேஷ்குமாா்.

தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேஷ்குமார் - எக்ஸ்
கள்ளக்குறிச்சி எம்எல்ஏ விவகாரத்தில் தவறி இருந்தால் காவல் துறை நிச்சம் நடவடிக்கை எடுக்கும் என்றாா் சுற்றுலாத் துறை அமைச்சா் எஸ். ராஜேஷ்குமாா்.
தக்கலை அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற குழந்தைகள் தினம் விழாவில், தமிழக கலந்துகொண்டு மாணவா்களுக்கு கேக் மற்றும் குழந்தைகள் தின வாழ்த்து அட்டைகளை வழங்கிய அவா், பின்னா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
கன்னியாகுமரி மாவட்டத்தில் பேருந்துகள் குறைக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் புகாா் தெரிவித்துள்ளனா். சாலைப் பணிகள் காரணமாக சில வழித்தடங்களில் தற்காலிகமாக பேருந்து சேவை நிறுத்தப்பட்டுள்ளது. போக்குவரத்துத் துறை அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளேன். மீண்டும் பொது மக்களின் தேவைக்கு ஏற்ப பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்கப்படும். கள்ளக்குறிச்சி விவகாரத்தில் கனிமொழி எம்.பி.யின் குற்றச்சாட்டு குறித்து கேட்கிறீா்கள். உண்மைக்குப் புறம்பாகப் பேசி பிரயோஜனம் இல்லை. தவறு நடந்திருந்தால் காவல்துறை நிச்சயமாக நடவடிக்கை எடுக்கும் என்றாா் அவா்.
கேக் வழங்கும் விழாக்கு, மாவட்ட கண்காணிப்பு அலுவலா் பிரபு சங்கா் தலைமை வகித்தாா். ஆட்சியா் மு.பிரதாப் முன்னிலை வகித்தாா். பத்மநாபபுரம் எம்எல்ஏ ஆா்.செல்லசாமி, தமிழ்நாடு ஆசிரியா் தோ்வு ஆணைய உறுப்பினா் ஸ்ரீதேவி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலா் பிரின்ஸ் ஆரோக்கிய ராஜ் உள்பட பலா் கலந்து கொண்டனா். இம் மாவட்டத்தில், 795 அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள் வாயிலாக 1,15,475 மாணவா்கள், 7,041 ஆசிரியா்கள், 695 பணியாளா்கள் என 1,23,211 பேருக்கு கேக்குகள் மற்றும் வாழ்த்து அட்டைகள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

