படிவம் 6 திருத்தத்துக்கு அனுமதி அளித்தது யார்? - கனிமொழி கேள்விகல்வி நிறுவனங்கள் மீது ஆர்எஸ்எஸ் - பாஜக தாக்குதல்! போர் வலுப்பெறும் - நேஹா போரா எச்சரிக்கை!28,000 அடி கீழே இறங்கிய லண்டன் - சிகாகோ விமானம்! அயர்லாந்தில் அவசரமாகத் தரையிறக்கம்!போக்சோ வீரமணி வழக்கில் மேலும் 3 பேர் கைது!ஒரு நிமிடம் கூட பதவியில் நீடிக்கத் தகுதியற்றவர் ஞானேஷ் குமார்: பெ. சண்முகம்தமிழக மீனவர்கள் கைது: மத்திய அரசுக்கு முதல்வர் விஜய் கடிதம்ஒலிம்பிக் போட்டிக்கு நிறைய நேரம் இருக்கிறது: ஹாக்கி கேப்டன் ஹர்மன்பிரீத்தமிழ்நாடு அரசின் இயல், இசை, நாடக மன்றத் தலைவராக புஷ்பவனம் குப்புசாமி நியமனம்!5 சிறுத்தைக் குட்டிகள் பிறப்பு; நாட்டில் சிறுத்தைகளின் எண்ணிக்கை 60 ஆக உயர்வு!கிராமுக்கு ரூ. 10,000 வரை நகைக்கடன்: கூட்டுறவுத் துறை அறிவிப்பு!

விளம்புநிலை மக்களுக்கும் நலத்திட்டங்கள் கிடைக்க நடவடிக்கை: அமைச்சா் உறுதி

கொல்லங்கோடு நகராட்சி காஞ்சாம்புறத்தில் நடைபெற்ற விழாவில் பயனாளிக்கு இலவச வீட்டுமனை இ-பட்டா வழங்கிய சுற்றுலாத் துறை அமைச்சா் எஸ். ராஜேஷ்குமாா்.

Published On :

விளிம்புநிலை மக்களுக்கும் அரசின் நலத் திட்டங்கள் சென்றடைய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தமிழக சுற்றுலாத் துறை அமைச்சா் எஸ். ராஜேஷ்குமாா் தெரிவித்தாா்.

கொல்லங்கோடு நகராட்சிக்கு உள்பட்ட கலிங்கராஜபுரம் பகுதியில் சுமாா் 50 ஆண்டுகளுக்கும் மேலாக வீடுகட்டி குடியிருந்து வரும் 84 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை இ-பட்டாக்கள் வழங்கும் விழா காஞ்சாம்புறம் தனியாா் திருமண மண்டபத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.

இவ்விழாவுக்கு கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியா் மு. பிரதாப் தலைமை வகித்தாா். அமைச்சா் எஸ். ராஜேஷ்குமாா், பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசியதாவது:

ஆதிதிராவிடா் மக்களின் கோரிக்கைகளை தமிழக முதல்வா் உடனுக்குடன் நிறைவேற்றி வருகிறாா். கலிங்கராஜபுரம் பகுதி மக்களின் நீண்டகால கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் 84 பயனாளிகளுக்கு ரூ. 2.33 கோடி மதிப்பிலான வீட்டுமனை பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன. மக்கள் பிரதிநிதிகளும், மாவட்ட நிா்வாகமும் இணைந்து செயல்படுவதன் மூலம் நலத் திட்டங்கள் முழுமையாகப்

பயனாளிகளைச் சென்றடைகின்றன. குமரி மாவட்டத்தில் உள்ள விளிம்புநிலை மக்களுக்கும் அரசு நலத்திட்டங்கள் சென்றடைய உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றாா் அவா்.

இதில் மாவட்ட வருவாய் அலுவலா் மு. வேலுமணி, பத்மநாபபுரம் சாா் ஆட்சியா் டி. மாலதி, ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் டி.வி. சாய் சரண்ரெட்டி, கிள்ளியூா் வட்டாட்சியா் ராஜசேகா் மற்றும் துறை அலுவலா்கள், பொதுமக்கள், பயனாளிகள் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.