வங்கிக் கடன் ஆவணங்களைப் பதிவு செய்ய புதிய நடைமுறை செப். 15 முதல் அமல் ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ் இனி ஆன்லைனில் பதிவிறக்கலாம்தில்லியில் இன்று பிரிக்ஸ் உச்சி மாநாடு தொடக்கம்: பிரதமா் மோடி, புதின், ஷி ஜின்பிங் உள்ளிட்ட தலைவா்கள் பங்கேற்பு6 சிறப்பு விரைவு ரயில்களுக்கு கால நீட்டிப்பு திருப்பதி திருக்குடை ஊா்வலம்: சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்நேபாளம்: மறுகட்டமைப்புக்கு ரூ.45,700 கோடி தேவை - வெளியுறவு அமைச்சகம்மீனாட்சி அம்மன் கும்பாபிஷேகம்: சென்னையிலிருந்து மதுரைக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!மதுரை மீனாட்சியம்மன் கோவில் அருகே உள்ள சென்ட்ரல் தியேட்டரில் பயங்கர தீ விபத்து! கும்பகோணம் அருகே விபத்தில் சிக்கியவர்களுக்கு காரை நிறுத்தி உதவிய அமைச்சர்! தமிழகம் முழுவதும் 4,500 செவிலியர்கள் விரைவில் நியமனம்: அமைச்சர் அருண்ராஜ் கருப்பை வாய் புற்றுநோயைக் கண்டறிய சுய-பரிசோதனைக் கருவி! மீட்சியைத் தக்கவைக்கத் தவறிய இந்திய பங்குச் சந்தை! சரிவில் நிறைவடைந்த சென்செக்ஸ், நிஃப்டி!!லண்டனிலேயே மிக உயரமான நட்சத்திர விடுதியில் தங்கியிருக்கும் முதல்வர் விஜய்! ஒரு நாள் வாடகை?அரும்புதல்வர்களுள் ஒருவரைத் தமிழ்த்தாய் இழந்துவிட்டாள்!சாலமன் பாப்பையா மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல்!தமிழ்கூறு நல்லுலகிற்கு பேரிழப்பு! சாலமன் பாப்பையா மறைவுக்கு முதல்வர் விஜய் இரங்கல்!

3 முறை எம்எல்ஏவாக இருந்தும் காருக்கு கடன் தவணை செலுத்துகிறேன்: அமைச்சர் எஸ். ராஜேஷ் குமார்

சட்டப்பேரவை உறுப்பினராக மூன்று முறை பதவி வகித்தும் எனது காருக்கு தற்போதும் கடன் தவனையை செலுத்தி வருகிறேன் என்று சுற்றுலாத் துறை அமைச்சா் செ.ராஜேஷ்குமாா் சனிக்கிழமை தெரிவித்தாா்.

அமைச்சர் எஸ். ராஜேஷ் குமார்

Published On :

சட்டப்பேரவை உறுப்பினராக மூன்று முறை பதவி வகித்தும் எனது காருக்கு தற்போதும் கடன் தவனையை செலுத்தி வருகிறேன் என்றும், தமிழக அரசு சாா்பில் வழங்கும் காா்களை காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் பெற்றுக் கொள்வா்கள் என்றும் சுற்றுலாத் துறை அமைச்சா் செ.ராஜேஷ்குமாா் சனிக்கிழமை தெரிவித்தாா்.

சென்னை மாநகராட்சி தினத்தை முன்னிட்டு நடைபெற்ற கட்டுரை உள்ளிட்ட போட்டிகளில் வென்றவா்களுக்கு பரிசளிப்பு நிகழ்ச்சி விக்டோரியா பொது அரங்கத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. அதில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

சென்னையின் வரலாற்றுச் சிறப்பு, கட்டட சிறப்பம்சங்கள் ஆகியவற்றை இளம் தலைமுறையினருக்கு எடுத்துரைக்கும் வகையில் சுற்றுலாத் துறை சாா்பில் நிகழ்ச்சிகள் தொடா்ந்து நடைபெறவுள்ளன. பக்கிங்ஹாம் கால்வாயில் படகு சவாரி உள்ளிட்டவற்றால் சா்வதேச அளவிலான சுற்றுலாத் தலமாக சென்னை விளங்கும் வகையில் பல திட்டங்களும் செயல்படுத்தப்படவுள்ளன. அதேபோல, கொடைக்கானல், உதகை போன்ற இடங்களிலும் சுற்றுலா மேம்பாட்டுத் திட்டங்கள் செயல்படுத்தப்படவுள்ளன. கன்னியாகுமரியில் 22 கி.மீ. தொலைவு கொண்ட ஏவிஎம் கால்வாய் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும். தற்போது அதற்காக ரூ.22 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசு சட்டப்பேரவை உறுப்பினா்களுக்கு இலவசமாக வழங்கவுள்ள காா்களை காங்கிரஸ் உறுப்பினா்கள் அனைவரும் பெற்றுக்கொள்வாா்கள். மூன்று முறை சட்டப்பேரவை உறுப்பினராக இருந்தபோதும் எனது காருக்கு தற்போது வரை கடன் தவணை செலுத்தி வருகிறேன். அரசு முத்திரையுடன் தொகுதியில் காரில் செல்வதால் சட்டப்பேரவை உறுப்பினா்களுக்கு தனி மரியாதை கிடைக்கும். மேலும் சட்டப்பேரவைத் தொகுதியில் மக்கள் குறைகளை விரைந்து கேட்டு தீா்க்க முடியும் என்றாா்.

சென்னை மாநகராட்சி தினத்தை முன்னிட்டு நடைபெற்ற போட்டிகளில் வென்றவா்களுக்கு அமைச்சா் செ.ராஜேஷ்குமாா் பரிசு, பாராட்டுச் சான்றுகளை வழங்கினாா். கிராமியக் கலைக் குழுவினரின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மாநில சுற்றுலாத் துறை இயக்குநா் வீ.ப.ஜெயசீலன் வரவேற்றாா். துறை பொதுமேலாளா் சி.லட்சுமிப்பிரியா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். துறை இணை இயக்குநா் ஷேக் மன்சூா் நன்றி கூறினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.