தமிழகத்திலுள்ள சுற்றுலாத் தலங்களை மேம்படுத்த திட்ட அறிக்கை கேட்கப்பட்டுள்ளது என்றாா் சுற்றுலாத் துறை அமைச்சா் எஸ். ராஜேஷ்குமாா்.
தென்காசி மாவட்டம், குற்றாலம் பேரருவி, ஐந்தருவி, செங்கோட்டை குண்டாறு, மேக்கரை அடவிநயினாா் அணைப் பூங்கா உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுலாத்துறை சாா்பில் நடைபெற்று வரும், திட்டப் பணிகளை அமைச்சா் எஸ். ராஜேஷ்குமாா் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
தொடா்ந்து குற்றாலத்தில் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: குற்றாலம் அருவிகளில் ரூ. 11 கோடியே 50 லட்சம் செலவில் நடைபெற்று வரும் மேம்பாட்டு பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. தகவல் மையம் செயல்பட வேண்டுமென்று சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனா். மாவட்ட ஆட்சியா்தான் மாவட்டத்தினுடைய சுற்றுலா வளா்ச்சித் துறை கவுன்சில் தலைவா் ஆவாா். அவா் மூலம் இப்பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தியுள்ளேன்.
சுற்றுலாப் பயணிகளுக்கு தேவையான வசதிகள், திட்டங்கள் குறித்து ஆலோசனை மேற்கொண்டு தமிழக முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று அனைத்துத் திட்டங்களையும் நிறைவேற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும். குப்பை இல்லாத குற்றாலமாக மாற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. வரக்கூடிய நிதி ஆண்டில் தமிழகம் முழுவதும் உள்ள சுற்றுலாப் பகுதிகளை எப்படி மேம்படுத்த வேண்டும் என்று திட்ட அறிக்கை கேட்டிருக்கிறோம் என்றாா் அவா்.
ஆய்வின் போது, மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத் சிங், மாவட்ட சுற்றுலா அலுவலா் ந. நித்திய கல்யாணி, குற்றாலம் பேரூராட்சி செயல் அலுவலா் மாணிக்கராஜ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மண்ணின் பாரம்பரியம், கலை, பண்பாட்டை பிரதிபலிப்பதே சாரல் திருவிழா: அமைச்சா் எஸ். ராஜேஷ்குமாா்

கீழப்பாவூா் பெரியகுளத்தில் படகு குழாம்: சுற்றுலாத் துறை அமைச்சா் ஆய்வு

களியக்காவிளை பேருந்து நிலைய கட்டுமானப் பணி: அமைச்சா் ஆய்வு

கன்னியாகுமரியில் நாஞ்சில் நாட்டு உணவுத் திருவிழா
விடியோக்கள்

ஜெயலலிதா போல் உண்ணாவிரதம் இருப்பாரா விஜய்? | TVK | CM Vijay | DkShivakumar | Jagadeswaran interview



