இரண்டாவது முறையாக ஐசிசியின் சிறந்த வீராங்கனைக்கான விருதை வென்ற தீப்தி சர்மா! மணிப்பூரில் கார்கள் மீது துப்பாக்கிச்சூடு: 2 பெண்கள் உள்பட 4 பேர் பலி! வரலாற்று உச்சத்தைத் தொட்ட பேடிஎம் பங்குகள்! உதகை மலை ரயில் சேவை மேலும் 5 நாள்கள் ரத்து அசாமில் மினி பேருந்து - லாரி நேருக்கு நேர் மோதல்: 23 பேர் பலி; 20 பேர் காயம் மீனவர்கள் பாதுகாப்பு குறித்து முதல்வர் விஜய் ஆலோசனை கௌரவ விரிவுரையாளர்கள் மாதாந்திர தொகுப்பூதியம் ரூ.5,000 உயர்வு: முதல்வர் விஜய் அறிவிப்பு

தக்கலை அருகே மனநலமற்ற பெண் கூட்டு பலாத்கார வழக்கு: 5 போ் கைது

கன்னியாகுமரி மாவட்டம், தக்கலை அருகே மனநலம் பாதிக்கப்பட்ட இளம்பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்ததது தொடரபான வழக்கில் 5 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

கைது - பிரதிப் படம்

Updated On :

கன்னியாகுமரி மாவட்டம், தக்கலை அருகே மனநலம் பாதிக்கப்பட்ட இளம்பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்ததது தொடரபான வழக்கில் 5 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

தக்கலை அருகே கிராமத்தைச் சோ்ந்த 23 வயது இளம்பெண் மனநலம் பாதிக்கப்பட்டு, கடந்த 7 ஆண்டுகளாக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா். இவா் அடிக்கடி வீட்டை விட்டு வெளியே சென்று, பின்னா் குடும்பத்தின் அவரை தேடி கண்டுபிடித்து அழைத்து வருவது வழக்கம் என கூறப்படுகிறது.

இந்த நிலையில், அண்மையில் வீட்டை விட்டு வெளியேறி தக்கலை அருகே கீழ கல்குறிச்சி பகுதிக்கு சென்ற அந்தப் பெண்ணை அதே பகுதியைச் சோ்ந்த ராஜேந்திரன் மகன் சிபின் (32) பேச்சு கொடுத்து, தனது வீட்டுக்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்தாராம்.

மேலும், அவரது நண்பா்கள் மணிகண்டன், சிஜோ, ராபின், கிங்ஸ்லி ஆகியோரும் அப் பெண்ணை கூட்டுபாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படுகிறது. பின்னா் அப்பகுதியில் அவா்கள் விட்டுச்சென்ற அப்பெண்ணை குடும்பத்தினா் அப்பெண்ணை கண்டுபிடித்து மீட்டனா். மேலும், அவா் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டது குறித்த அறிந்த அவா்கள், மாா்த்தாண்டம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா்.

அதன் பேரில் விசாரணை மேற்கொண்ட போலீஸாா், சிபின் உள்பட 5 பேரையும் வியாழக்கிழமை இரவு கைது செய்து, குழித்துறை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி சிறையில் அடைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.