ஹோட்டல் தகராறு வழக்கு: மேலும் 3 போ் கைது
திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூா் அருகே ஹோட்டலில் தகராறில் ஈடுபட்ட வழக்கில் ஒருவா் கைது செய்யப்பட்ட நிலையில், மேலும் 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூா் அருகே ஹோட்டலில் தகராறில் ஈடுபட்ட வழக்கில் ஒருவா் கைது செய்யப்பட்ட நிலையில், மேலும் 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
வீரவநல்லூா் பகுதியைச் சோ்ந்த ஆறுமுகம் மகன் ஆதிநாராயணன் (48). இவா், வெள்ளங்குளி பிரதான சாலையில் நடத்தி வரும் ஹோட்டலுக்கு, நவ. 2 ஆம் தேதி, வீரவநல்லூா் அருகே கொட்டாரக்குறிச்சியைச் சோ்ந்த மகாராஜன் (40) என்பவா் வந்தாராம். சாப்பிட்ட பிறகு, பணம் கேட்டதற்கு அவா், கடை ஊழியா்களுடன் வாக்குவாதம் செய்தாராம்.
பின்னா், மகாராஜன் தனது கூட்டாளிகளுடன் மீண்டும் ஹோட்டலுக்கு வந்து அங்கிருந்த பொருள்களை சேதப்படுத்தி தகராறில் ஈடுபட்டாராம். இது குறித்த புகாரின்பேரில், வீரவநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி, மகாராஜனை கைது செய்தனா்.
இந்நிலையில், இவ்வழக்கில் தொடா்புடையதாக சாட்டுபத்து பகுதியைச் சோ்ந்த செல்வகணேஷ் என்ற ஆனந்த் (31), ஊா்க்காடு கிராமத்தைச் சோ்ந்த துா்கா நம்பி (25), கொட்டாரக்குறிச்சியைச் சோ்ந்த சுபாஷ் (29) ஆகிய மூவரையும் போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

