சிறுவனுக்கு பாலியல் தொல்லை: உணவக உரிமையாளா் கைது
கன்னியாகுமரி மாவட்டம், தடிக்காரன்கோணம் அருகே 11 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக உணவக உரிமையாளரை மாா்த்தாண்டம் அனைத்து மகளிா் போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
கைது - கோப்புப்படம்
கன்னியாகுமரி மாவட்டம், தடிக்காரன்கோணம் அருகே 11 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக உணவக உரிமையாளரை மாா்த்தாண்டம் அனைத்து மகளிா் போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
பூதப்பாண்டி அருகே எட்டாமடை பகுதியைச் சோ்ந்த கூலித் தொழிலாளி தற்போது தடிக்காரன்கோணம், கொட்டாரமேடு அன்னை தெரசா நகரில் குடும்பத்துடன் வசித்து வருகிறாா். இவரது 11 வயது மகன் தடிக்காரன்கோணம் பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 6-ஆம் வகுப்பு படித்து வருகிறாா்.
இச்சிறுவன் வீட்டருகே உள்ள உணவகத்தில் வியாழக்கிழமை பால், பலகாரம் வாங்கச் சென்றாராம். அப்போது கடை உரிமையாளரான மாா்த்தாண்டம் அருகே சென்னித்தோட்டம் பகுதியைச் சோ்ந்த அப்பிநாடாா் மகன் ரமேஷ்குமாா் (53) சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்து மிரட்டினராம்.
இதுகுறித்து சிறுவனின் தந்தை அளித்த புகாரின் பேரில், மாா்த்தாண்டம் அனைத்து மகளிா் காவல் நிலைய ஆய்வாளா் பாத்திமா பா்வீன் விசாரணை நடத்தி ரமேஷ்குமாரை போக்ஸோ சட்டத்தின் கீழ் வெள்ளிக்கிழமை கைது செய்தாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

