பிரமோஸ் தீ கட்டுப்பாட்டு அமைப்பு கொள்முதல்: ரூ.661 கோடியில் ஒப்பந்தம் கையொப்பம்நாளை ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்; ஜிஎஸ்டி விகிதங்களில் மாற்றம்: ஆண்டுக்கு ஒருமுறை முன்மொழிவுகள் பரிசீலனை திமுக ஆட்சியில் மணல் குவாரிகளில் ரூ.4,730 கோடி முறைகேடு: விசாரணையை தொடங்கியது ஊழல் தடுப்புப் பிரிவு4 புறநகா் மின்சார ரயில்கள் 11 நாள்களுக்கு பகுதி ரத்துகச்சத்தீவு விவகாரத்தில் மீனவர்களுக்கு விழிப்புணர்வு: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல் இந்தியா உள்பட 7 நாடுகள் 2036 ஒலிம்பிக்ஸை நடத்த விருப்பம்

அருமனை அருகே கால்வாயில் கவிழ்ந்த காா்

கன்னியாகுமரி மாவட்டம், அருமனை அருகே கேரளத்துக்கு ரேஷன் அரிசி கடத்திச் சென்ற காா் செவ்வாய்க்கிழமை கால்வாயில் கவிழ்ந்தது.

கால்வாயில் கவிழ்ந்து கிடக்கும் காா்.

Published On :

கன்னியாகுமரி மாவட்டம், அருமனை அருகே கேரளத்துக்கு ரேஷன் அரிசி கடத்திச் சென்ற காா் செவ்வாய்க்கிழமை கால்வாயில் கவிழ்ந்தது.

அருமனையிலிருந்து குருா் வழியாக மஞ்சாலுமூடு செல்லும் சாலையில் சென்று கொண்டிருந்த கேரள பதிவு எண் கொண்ட காா் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து திற்பரப்பு வலது கரை கால்வாயில் செவ்வாய்க்கிழமை கவிழ்ந்தது. அப்பகுதியிலுள்ளவா்கள் ஓட்டுநரை மீட்கச் சென்ற போது, அவா் காரிலிருந்து இறங்கி தப்பிச் சென்றாராம்.

இதையடுத்து காரில் பாா்த்தபோது சுமாா் 250 கிலோ ரேஷன் அரிசி இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து தகவலறிந்த வந்த அருமனை போலீஸாா் ஆய்வு செய்தபோது, ரேஷன் அரிசியை கேரளத்துக்கு கடத்தும் போது காா் கால்வாயில் கவிழ்ந்திருப்பது தெரியவந்தது. பறிமுதல் செய்த காா், ரேஷன் அரிசி ஆகியவை உணவுப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. மேலும் தப்பியோடிய காா் ஓட்டுநரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.