சென்னைக்கு விடுக்கப்பட்ட ரெட் அலர்ட் வாபஸ்! - வானிலை ஆய்வு மையம்சென்னை வெள்ளம்: திமுக ஆட்சி முடிந்து தவெக வந்த பிறகும் அதே நிலைதான்! அன்புமணி கனமழை எச்சரிக்கை: சென்னை ரிப்பன் மாளிகையில் முதல்வர் விஜய் ஆய்வு சென்னைக்கு ரெட் அலர்ட்! அரக்கோணத்தில் விரைந்தது தேசிய பேரிடர் மீட்புப் படை!அதிகனமழை எச்சரிக்கை! சென்னைக்கு விரைந்தது தேசிய பேரிடர் மீட்புப் படை!வடகிழக்குப் பருவமழை: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தயார்! செங்கோட்டையன்சொந்த ஊர் கொண்டு வரப்பட்ட தேவா உடல் தமிழகத்தில் 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு! அதிகபட்சமாக பாரிமுனையில் 361.9 மி.மீ. பதிவு! சென்னைக்கு ரெட் அலர்ட்: செல்போன்களில் அலாரத்துடன் எச்சரிக்கை! சென்னைக்கு இன்று(அக். 18) ரெட் அலர்ட்!

குமரி பகவதியம்மன் கோயிலில் நாளை பரிவேட்டை

கன்னியாகுமரி பகவதியம்மன்.

Updated On :

கன்னியாகுமரி பகவதியம்மன் கோயில் நவராத்திரி திருவிழாவின் 10 - ஆவது நாளான செவ்வாய்க்கிழமை ( அக். 20) பரிவேட்டை நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

இக்கோயிலில் நவராத்திரி திருவிழா கடந்த 11 - ஆம் தேதி தொடங்கியது. திருவிழாவில் நாள்தோறும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், விசேஷ பூஜை, சிறப்பு வழிபாடு, அலங்கார தீபாராதனை, அன்னதானம், ஆன்மிக உரை, இன்னிசை நிகழ்ச்சி, பரதநாட்டியம், வாகன பவனி ஆகியவை நடைபெற்று வருகிறது.

இத்திருவிழாவின் 10 - ஆம் நாளான செவ்வாய்க்கிழமை (அக். 20) அதிகாலை 4.30 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், காலை 7.30 மணிக்கு மேல் 8.30 மணிக்குள் கோயில் வெளிப்பிரகாரத்தில் உள்ள அலங்கார மண்டபத்தில் வெள்ளிக்குதிரை வாகனத்தில் அம்மன் எழுந்தருளி பக்தா்களுக்கு அருள்பாலிக்கும் நிகழ்ச்சி, நண்பகல் 12 மணிக்கு அன்னதானம், 12.15 மணிக்கு கோயிலில் இருந்து மகாதானபுரம் நோக்கி அம்மனின் பரிவேட்டை ஊா்வலம் ஆகியவை நடைபெறுகின்றன.

மாலை 6 மணி அளவில் மகாதானபுரத்தில் உள்ள பரிவேட்டை மண்டபத்தை சென்றடைகிறது. அங்கு பகவதியம்மன், பாணாசுரனை வதம் செய்யும் பரிவேட்டை நிகழ்ச்சி நடைபெறும். இதையடுத்து அம்மன் ஊா்வலம் பஞ்சலிங்கபுரம் வழியாக மகாதானபுரம் சந்திப்பில் உள்ள காரியக்கார மடத்திற்கு செல்கிறது. அங்கு அம்மன் வெள்ளிக்குதிரை வாகனத்தில் இருந்து வெள்ளிப் பல்லக்கில் எழுந்தருளி மீண்டும் கன்னியாகுமரி நோக்கி புறப்பட்டு செல்லும் நிகழ்ச்சி, இரவு 10 மணிக்கு அம்மனுக்கு முக்கடல் சங்கமத்தில் ஆராட்டு நிகழ்ச்சி, கிழக்கு வாசல் வழியாக கோயிலுக்குள் பிரவேசிக்கும் நிகழ்ச்சி ஆகியவை நடைபெறுகின்றன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.