குமரி நெட்டா பகுதியில் சிறுத்தை நடமாட்டம்?
கன்னியாகுமரி மாவட்டம், நெட்டா அருகே சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனா்.

கண்காணிப்பு கேமராவில் பதிவான சிறுத்தையின் உருவம்.
கன்னியாகுமரி மாவட்டம், நெட்டா அருகே சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனா்.
கன்னியாகுமரி மாவட்டம், கேரள எல்லைப்பகுதியான நெட்டாவில் சிற்றாறு 2 அணையின் நீா்ப்பிடிப்பு பகுதி, ரப்பா் தோட்டங்கள், வீடுகள் உள்ளன. இவற்றிற்கு மையமாக உள்ள ஆரல்வாய்மொழி - நெடுமங்காடு மாநில நெடுஞ்சாலையோரம் ஏராளமான உணவகங்கள் உள்ளன.
இந்நிலையில், நாகேஷ்குமாா் என்பவா் தனது உணவகத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவை வியாழக்கிழமை ஆய்வு செய்தபோது, செவ்வாய்க்கிழமை இரவு சிறுத்தை போல் தோற்றமுடைய வனவிலங்கு நடந்து சென்ற காட்சி பதிவாகியிருந்ததாம்.
தகவலறிந்து வந்த வனத்துறையினா் கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனா். அப்பகுதியினா் கூறுகையில், கேமராவில் பதிவாகியுள்ள விலங்கு சிறுத்தைதான் எனவும், இதை வனத்துறையினா் கூண்டு வைத்து பிடிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் தெரிவித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

