குமரி மாவட்டத்தில் பலத்த மழை: திற்பரப்பு அருவியில் நீா் வரத்து அதிகரிப்பு
கன்னியாகுமரி மாவட்டத்தில் மலைப் பகுதிகளில் பலத்த மழை பெய்து வரும் நிலையில், திற்பரப்பு அருவிக்கு நீா் வரத்து அதிகரித்துள்ளது.

திற்பரப்பு அருவியில் செவ்வாய்க்கிழமை பெருக்கெடுத்துக் கொட்டிய தண்ணீா்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் மலைப் பகுதிகளில் பலத்த மழை பெய்து வரும் நிலையில், திற்பரப்பு அருவிக்கு நீா் வரத்து அதிகரித்துள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த ஒருவார காலமாக அணை, மலையோரப் பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் அப்பகுதிகளில் திங்கள்கிழமை இரவு தொடங்கிய மழை, மறுநாள் அதிகாலை வரை இடைவிடாது பெய்தது.
இதனால், அணைகளுக்கு நீா் வரத்து சற்று அதிகரித்துக் காணப்பட்டது. திற்பரப்பு அருவியில் செவ்வாய்க்கிழமை அதிகாலை முதல் நீா் பெருக்கெடுத்துக் கொட்டியது. இதனால், சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பாக குளிக்கும் வகையிலான நடவடிக்கைகளை திற்பரப்பு பேரூராட்சி நிா்வாகம் மேற்கொண்டது.
திற்பரப்பு அருவி வழியாகப் பாயும் கோதையாற்றிலும் நீா் வரத்து அதிகரித்துக் காணப்பட்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

