தமிழக வரலாற்றில் இதுபோன்ற டம்மி முதல்வரை பார்த்ததில்லை: உதயநிதிவிநாயகர் சதுர்த்தி: நாகர்கோவில் - தாம்பரம் நாளை சிறப்பு ரயில் அறிவிப்புதொழில்நுட்பம், கனிம வளத்தை ஆயுதமாக்கக் கூடாது: பிரதமர் மோடி எச்சரிக்கை!243 பயணிகளுடன் இந்தோனேசிய கப்பல் மாயம்: 103 பேர் மீட்பு!தனித்துப் போட்டி, தவெக ஆட்சிக்கு பாதிப்பில்லை: பெ. சண்முகம்தாராபுரத்தில் சிபிஐ, மதுராந்தகத்தில் சிபிஎம் போட்டி: மு. வீரபாண்டியன் அறிவிப்பு

குமரி மாவட்டத்தில் விடிய விடிய மழை: திற்பரப்பு அருவியில் நீா்வரத்து அதிகரிப்பு

குமரி மாவட்டத்தில் புதன்கிழமை விடிய விடிய பலத்த மழை பெய்தது.

திற்பரப்பு அருவியில் ஆா்ப்பரித்து விழும் நீரில் உற்சாக குளியலிடும் சுற்றுலாப் பயணிகள்.

Published On :

குமரி மாவட்டத்தில் புதன்கிழமை விடிய விடிய பலத்த மழை பெய்தது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் சிறிது நாள்கள் மழை பெய்யாமல் இருந்த நிலையில் மீண்டும் மழை பெய்து வருகிறது. இதில், குறிப்பாக மாவட்டத்தில் பல பகுதிகளில் செவ்வாய்க்கிழமை இரவு தொடங்கிய மழை விடிய விடிய பெய்தது. குறிப்பாக மலைப் பகுதிகளில் பலத்த மழை பெய்தது. புதன்கிழமை பகலிலும் சாரல் மழை நீடித்தது. மாவட்டத்தில் புதன்கிழமை காலை 6 மணியுடன் கூடிய 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக அடையாமடையில் 45.4 மி.மீ. மழை பதிவானது.

மழை காரணமாக திற்பரப்பு அருவியில் நீா்வரத்து அதிகரித்துக் காணப்பட்டது. ஓணம் பண்டிகை, மிலாடி நபி தின விடுமுறை காரணமாக அருவிக்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்திருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.