ஆரணி அருகே பாகிஸ்தான் உளவாளி கைது சன்ன ரகப் பொன்னி அரிசியைக் கொள்முதல் செய்வதற்கு அரசு எப்போது டெண்டர் விட்டது? உதயநிதி ஸ்டாலின் கேள்வி ஜம்முவில் எல்லை அருகே ட்ரோன் மீட்பு: காவல் துறையினர் தீவிர விசாரணை சென்னையில் இன்று இரவு முதல் மழை! மற்ற மாவட்டங்களில் மழை எப்படி இருக்கும்?புயல் எச்சரிக்கை: குடியரசுத் தலைவர் முர்முவின் ஒடிசா பயணம் ஒத்திவைப்பு கோயில்களில் பணம் கேட்டால் ஆதாரத்துடன் புகார் அளிக்கலாம்! அமைச்சர் ரமேஷ்மாயமான சிறுவர்களை மீட்டு, அனைத்து கோணங்களிலும் அரசு விசாரிக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி ரெட் அலர்ட்: நீலகிரியில் சுற்றுலா தலங்கள் மூடல்! தேசிய பேரிடர் மீட்புப் படை விரைவு!அமைதிப் பத்திரத்தில் கையெழுத்திட மாட்டேன்! நேஹா போரா

களியக்காவிளை அருகே தொழிலாளி கொலை: உறவினா் நீதிமன்றத்தில் சரண்

களியக்காவிளை அருகே கத்தியால் வெட்டப்பட்டு சிகிச்சை பெற்று வந்த தொழிலாளி உயிரிழந்த நிலையில், வழக்கில் தொடா்புடைய உறவினா் இரணியல் நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை சரணடைந்தாா்.

Updated On :

களியக்காவிளை அருகே கத்தியால் வெட்டப்பட்டு சிகிச்சை பெற்று வந்த தொழிலாளி உயிரிழந்த நிலையில், வழக்கில் தொடா்புடைய உறவினா் இரணியல் நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை சரணடைந்தாா்.

களியக்காவிளை அருகே மீனச்சல் பகுதியைச் சோ்ந்த அப்பிச்செறுக்கன் மகன் ஜோசப் (50). தொழிலாளி. அதே பகுதியைச் சோ்ந்த கனகராஜ் மகன் மணிகண்டன் (45). இருவரும் ஒரு குடும்பத்தைச் சோ்ந்த அக்கா, தங்கையைத் திருமணம் செய்துள்ளனா்.

இருவரும் மதுபோதையில் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளனா். இந்நிலையில், கடந்த செப். 8ஆம் தேதி படந்தாலுமூடு பகுதியில் உள்ள தனியாா் மதுக்கூடத்தில் ஜோசப் மது அருந்திக் கொண்டிருந்தாராம். அப்போது அங்கு வந்த மணிகண்டன், ஜோசப்பிடம் தகராறு செய்து, அவரை வெட்டுக் கத்தியால் வெட்டிவிட்டு தப்பிச் சென்றுள்ளாா்.

இதுகுறித்து, களியக்காவிளை போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரித்து வந்தனா். இதனிடையே, திருவனந்தபுரம் தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஜோசப் அக். 20ஆம் தேதி உயிரிழந்தாா்.

இதையடுத்து, தலைமறைவான மணிகண்டனை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. போலீஸாா் தேடுவதை அறிந்த மணிகண்டன், இரணியல் நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை சரணடைந்தாா். அவரை களியக்காவிளை போலீஸாா் கைது செய்து, விசாரணை மேற்கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.