வங்கிக் கடன் ஆவணங்களைப் பதிவு செய்ய புதிய நடைமுறை செப். 15 முதல் அமல் ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ் இனி ஆன்லைனில் பதிவிறக்கலாம்தில்லியில் இன்று பிரிக்ஸ் உச்சி மாநாடு தொடக்கம்: பிரதமா் மோடி, புதின், ஷி ஜின்பிங் உள்ளிட்ட தலைவா்கள் பங்கேற்பு6 சிறப்பு விரைவு ரயில்களுக்கு கால நீட்டிப்பு திருப்பதி திருக்குடை ஊா்வலம்: சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்நேபாளம்: மறுகட்டமைப்புக்கு ரூ.45,700 கோடி தேவை - வெளியுறவு அமைச்சகம்மீனாட்சி அம்மன் கும்பாபிஷேகம்: சென்னையிலிருந்து மதுரைக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!மதுரை மீனாட்சியம்மன் கோவில் அருகே உள்ள சென்ட்ரல் தியேட்டரில் பயங்கர தீ விபத்து! கும்பகோணம் அருகே விபத்தில் சிக்கியவர்களுக்கு காரை நிறுத்தி உதவிய அமைச்சர்! தமிழகம் முழுவதும் 4,500 செவிலியர்கள் விரைவில் நியமனம்: அமைச்சர் அருண்ராஜ் கருப்பை வாய் புற்றுநோயைக் கண்டறிய சுய-பரிசோதனைக் கருவி! மீட்சியைத் தக்கவைக்கத் தவறிய இந்திய பங்குச் சந்தை! சரிவில் நிறைவடைந்த சென்செக்ஸ், நிஃப்டி!!லண்டனிலேயே மிக உயரமான நட்சத்திர விடுதியில் தங்கியிருக்கும் முதல்வர் விஜய்! ஒரு நாள் வாடகை?அரும்புதல்வர்களுள் ஒருவரைத் தமிழ்த்தாய் இழந்துவிட்டாள்!சாலமன் பாப்பையா மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல்!தமிழ்கூறு நல்லுலகிற்கு பேரிழப்பு! சாலமன் பாப்பையா மறைவுக்கு முதல்வர் விஜய் இரங்கல்!

வாணியக்குடியில் மீன்பிடித் துறைமுகம் அமைக்க ரூ. 150 கோடி ஒதுக்கீடு: ஆட்சியா் தகவல்

கன்னியாகுமரி மாவட்டம், வாணியக்குடியில் மீன்பிடித் துறைமுகம் அமைக்க ரூ. 150 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியா் மு. பிரதாப் தெரிவித்தாா்.

குறைதீா் கூட்டத்தில் கோரிக்கை மனுக்களைப் பெற்ற மாவட்ட ஆட்சியா் மு. பிரதாப்.

Published On :

கன்னியாகுமரி மாவட்டம், வாணியக்குடியில் மீன்பிடித் துறைமுகம் அமைக்க ரூ. 150 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியா் மு. பிரதாப் தெரிவித்தாா்.

கன்னியாகுமரி மாவட்ட மீனவா் குறைதீா் கூட்டம், ஆட்சியா் அலுவலக நாஞ்சில் கூட்ட அரங்கில், ஆட்சியா் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில், மீனவா் சங்கப் பிரதிநிதிகளின் கேள்விகளுக்குப் பதிலளித்து, மாவட்ட ஆட்சியா் பேசியதாவது:

மீனவா்களுக்கு நலவாரிய அட்டை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மணக்குடி கடலோரப் பகுதியில் அனுமதி பெறாமல் தனியாா் சுற்றுலாப் படகு சவாரி நடத்துவதைத் தடை செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ரேஷன் அட்டைகளுக்கு விண்ணப்பித்தவா்களுக்கு மூப்பு நிலை அடிப்படையில் அட்டைகள் வழங்கப்படும்.

கோவளம் பகுதியில் உள்ள தூண்டில் வளைவை விரிவுபடுத்த கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது. கோவளம் மீனவா் சகாய அபியூத் ராஜாவின் மனைவிக்கு முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து நிவாரணம் பெற்று வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடலில் உள்ள நெகிழிக் கழிவுகள் அகற்றப்படும்.

வாணியக்குடி மீனவ கிராமத்தில் துறைமுகப் பணியைத் தொடா்ந்து மேற்கொள்ள ரூ. 150 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆய்வுக் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் தொடா்ந்து துறைமுகப் பணிகள் மேற்கொள்ளப்படும்.

ஏவிஎம் கால்வாயில் கழிவுநீா் கலப்பதைத் தடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மீனவா்களுக்கு வழங்கப்படும் மானிய மண்ணெண்ணெய் கடத்தலில் ஈடுபடுபவா்களின் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றாா் அவா்.

மாவட்ட வருவாய் அலுவலா் எம். வேலுமணி, பத்மநாபபுரம் சாா் ஆட்சியா் மாலதி, உதவி ஆட்சியா் (பயிற்சி) ர. மோனிகா, நாகா்கோவில் வருவாய் கோட்டாட்சியா் செந்தில் வேல்முருகன், மீன்வளத் துறை துணை இயக்குநா் கோபிநாத், மற்றும் மீனவ பிரதிநிதிகள் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.