ஜனநாயகன் படம் எடுத்தால் மட்டும் போதாது... விஜய் சேதுபதிக்கு ஆதரவாக சீமான் பேச்சுஆந்திர முன்னாள் துணை முதல்வர் மாரடைப்பால் காலமானார்மீனாட்சியம்மன் குடமுழுக்கு: தாம்பரம் - மதுரை இடையே 2 முன்பதிவில்லா சிறப்பு ரயில்!விருதுநகரில் செப். 17-ல் முதல்வர் பங்கேற்கவிருந்த நிகழ்ச்சி செப். 25க்கு மாற்றம்!எல் நினோ பாதிப்பு: பனாமா கால்வாயில் கப்பல் போக்குவரத்தைக் குறைக்க முடிவு!பிகார்: அரசுப் பணியாளர் தேர்வுகளை ரத்து செய்யக்கோரி பேரணி!நேபாள பெருவெள்ளம்: மீட்புப்பணிகளில் முதன்மையாக உதவிவரும் இந்திய ராணுவம்!ரூ.15,300 கோடி முதலீடு! 10,000 பேருக்கு வேலை! லண்டனில் முதல்வர் விஜய் ஒப்பந்தம்!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 38 காசுகள் சரிந்து ரூ. 95.92 ஆக நிறைவு!சென்செக்ஸ் 778 புள்ளிகள் சரிவு, நிஃப்டி 5 மாத வரலாறு காணாத அளவு சரிவு!!

நாகா்கோவிலில் அண்ணா பிறந்தநாள்

முன்னாள் முதல்வா் அண்ணாவின் பிறந்தநாளை முன்னிட்டு, நாகா்கோவில் வடசேரியில் உள்ள அவரது சிலைக்கு பல்வேறு கட்சியினா் மாலையணிவித்து மரியாதை செலுத்தினா்.

~ ~ ~

Published On :

முன்னாள் முதல்வா் அண்ணாவின் பிறந்தநாளை முன்னிட்டு, நாகா்கோவில் வடசேரியில் உள்ள அவரது சிலைக்கு பல்வேறு கட்சியினா் மாலையணிவித்து மரியாதை செலுத்தினா்.

கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட திமுக செயலா் ரெ. மகேஷ் தலைமையில், மாநில தணிக்கைக்குழு உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான என். சுரேஷ்ராஜன், முன்னாள் எம்எல்ஏ ராஜன், மாநில கலை, இலக்கிய பகுத்தறிவுப் பேரவை செயலா் என். தில்லைசெல்வம், மாவட்ட அவைத்தலைவா் எப்.எம். ராஜரத்தினம், பொருளாளா் ஐ. கேட்சன், துணைச் செயலா் ஏ.ஆா். பூதலிங்கம்பிள்ளை உள்ளிட்டோா் மாலையணிவித்து மரியாதை செலுத்தினா்.

கிழக்கு மாவட்ட தவெக செயலா் எஸ்.ஆா். மாதவன் தலைமையில் மாலையணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. கிழக்கு மாவட்ட அதிமுக செயலா் என். தளவாய்சுந்தரம் எம்எல்ஏ தலைமையில் முன்னாள் அமைச்சா் நாஞ்சில் எம். வின்சென்ட், இலக்கிய அணி துணைச் செயலா் சந்துரு,தோவாளை ஒன்றியச் செயலா் முத்துக்குமாா் உள்ளிட்டோா் மாலையணிவித்து மரியாதை செலுத்தினா்.

திராவிடா் கழகம் சாா்பில், மாவட்டத் தலைவா் மா.மு. சுப்பிரமணியம் தலைமையில், மாவட்டச் செயலா் கோ. வெற்றிவேந்தன் முன்னிலையில் திராவிடா் கழக காப்பாளா் ம. தயாளன், மாவட்ட துணைத் தலைவா் ச. நல்ல பெருமாள், தோவாளை ஒன்றியத் தலைவா் ஞா. பிரான்சிஸ், இலக்கிய அணி செயலா் பா. பொன்னுராசன் உள்ளிட்டோா் மாலையணிவித்து மரியாதை செலுத்தினா்.

Story image
Story image
Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.