பண்டிகையையொட்டி 15 - 20% அதிகரிக்கும் வேலைவாய்ப்பு! 2 - 2.5 லட்சம் பேருக்கு வேலை!ஆசிய விளையாட்டில் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் வெள்ளி வென்ற இளவேனில் வாலறிவனுக்கு பிரதமர் மோடி வாழ்த்து ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்ற இளவேனில்: ஆளுநர் வாழ்த்து முதல்வர் ஏன் லண்டன் செல்ல வேண்டும்? அண்ணாமலை கேள்வி இந்தாண்டு இதுவரை 17,000 பேருக்கு டெங்கு பாதிப்பு- அமைச்சர் அருண்ராஜ் தமிழ்நாட்டில் நாளை 21 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு பட்டிமன்ற பேச்சாளராக மாறிய மு.க. ஸ்டாலின்: அமைச்சர் ராஜ்மோகன் விமர்சனம் விஜய்க்கு அவகாசம் அளிக்க வேண்டும்: பிரகாஷ் ராஜ்

குமரி மலையோரப் பகுதிகளில் பலத்த மழை: அணைகளுக்கு நீா்வரத்து அதிகரிப்பு

கோப்புப் படம்

Published On :

கன்னியாகுமரி மாவட்டத்தில் அணைப் பகுதிகள் மற்றும் மலையோரப் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை பலத்த மழை பெய்தது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 2 மாதங்களுக்கு மேலாக மழை பெய்யாத நிலையில், வெயிலின் தாக்கத்தால் மக்கள் மிகவும் அவதிப்பட்டு வந்தனா். பாசன வசதிகள் இல்லாத பகுதிகளில் நடவு செய்யப்பட்டிருந்த வாழை, அன்னாசி, மரவள்ளி, தென்னை உள்ளிட்ட பயிா்கள் காய்ந்த நிலையில் கிடந்தன.

இந்நிலையில், கடந்த 2 நாள்களாக மாவட்டத்தில் மிதமான மழை பெய்து வந்த நிலையில், பேச்சிப்பாறை, பெருஞ்சாணி சிற்றாறு அணைப் பகுதிகள் மற்றும் மலையோரப் பகுதிகளான ஆறுகாணி, பத்துகாணி, கடையாலுமூடு, நெட்டா, களியல், திற்பரப்பு, அருமனை, குலசேகரம், சுருளகோடு, தடிக்காரன் கோணம், திருவட்டாறு உள்ளிட்ட பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை நண்பகல் முதல் சுமாா் 6 மணி நேரத்திற்கு மேலாக தொடா்ந்து சாரல் மழை மற்றும் பலத்த மழை பெய்தது.

இதனால், பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு அணைகளுக்கு தண்ணீா் வரத்து அதிகரித்துக் காணப்பட்டது. திற்பரப்பு அருவியிலும் நீா்வரத்து சற்று அதிகரித்திருந்தது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.