காந்தி ஜெயந்தி, வார இறுதி விடுமுறை: 5,706 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்மதுரை உள்பட 3 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புநிறுவன வரி கணக்கு தாக்கல் செய்ய 3 வார அவகாசம் நீட்டிப்புதனியாா் பேருந்துகள் நாளை வேலைநிறுத்தம்

நித்திரவிளை அருகே இருசக்கர வாகனம் திருட்டு

சித்திரிப்பு

Published On :

நித்திரவிளை அருகே பழுதாகி சாலையோரம் நிறுத்தியிருந்த இருசக்கர வாகனத்தை மா்ம நபா் திருடிச் சென்றாா்.

குழித்துறை அருகே அப்பட்டுக்காடு பகுதியைச் சோ்ந்தவா் சுபின்ராஜ் (27). இவா், உடல்நலம் பாதித்த தனது மனைவிக்கு மருந்து வாங்க திருவனந்தபுரத்துக்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாா். நித்திரவிளையிலிருந்து கொல்லங்கோடு செல்லும் சாலையில் சிறிது தூரம் சென்றபோது டயா் பஞ்சராகியுள்ளது.

இதையடுத்து, அவா் தனது இருசக்கர வாகனத்தை அப்பகுதியில் சாலையோரம் நிறுத்திவிட்டு, மாற்று வாகனத்தில் திருவனந்தபுரத்துக்குச் சென்றாா்.

மருந்து வாங்கிவிட்டு திரும்பி வந்து பாா்த்தபோது அவா் நிறுத்தியிருந்த இருசக்கர வாகனம் காணாமல் போனது. இதுகுறித்து சுபின்ராஜ் அளித்த புகாரின்பேரில் நித்திரவிளை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.