ஞானேஷ் குமார் பதவி விலகாவிட்டால் போராட்டம் வலுக்கும்: மமதா பானர்ஜிநடுவானில் துபை விமானத்தில் கத்திக்குத்து! தாக்கப்பட்ட விமானி இந்தியரா?தேர்தல் மூலம் மாநிலங்களை பாஜகவுக்கு தாரைவார்த்தவர் ஞானேஷ் குமார்: காங்கிரஸ்3 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 13 காசுகள் உயர்ந்து ரூ. 95.81 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: தொடர்ந்து 3வது நாளாக சரிவில் சென்செக்ஸ், நிஃப்டி!இ-கேஒய்சி முடிக்கவில்லை என்றாலும்... குடும்ப அட்டைதாரர்களுக்கு பொருள்கள் நிறுத்தப்படாது: தமிழக அரசுதிமுகவினருக்கு மறதி அதிகம்: தாராபுரம் பிரசாரத்தில் முதல்வர் விஜய் பேச்சுஇஸ்ரேல் சென்ற விமானம் சௌதியில் தரையிறக்கம்! நடுவானில் விமானியைக் கொல்ல முயன்ற சக விமானி?கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: தொடர்ந்து 3வது நாளாக சரிவில் சென்செக்ஸ், நிஃப்டி!எம்மதமும் சம்மதம் மட்டுமல்ல எம்மதமும் நம்மதம்! முதல்வர் விஜய் பேச்சு!பேசும்போது மேடையில் கண்கலங்கிய சத்தியபாமா: ஆறுதல் சொன்ன முதல்வர் விஜய்!தவெகவில் இணைந்தார் செம்மலை! கட்சித் துண்டு அணிவித்த முதல்வர் விஜய்!ஜனநாயகத்தை சீர்குலைத்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவார்கள்! ராகுல்

திற்பரப்பு அருகே பன்றிப் பண்ணைக்கு ‘சீல்’: உரிமையாளா் கைது

கன்னியாகுமரி மாவட்டம் திற்பரப்பு பேரூராட்சி, பிணந்தோடு சிறைக்குளம் பகுதியில் சுகாதாரக் கேட்டை ஏற்படுத்தியதாக பன்றிப் பண்ணைக்கு புதன்கிழமை ‘சீல்’ வைக்கப்பட்டது.

கைது

Published On :

கன்னியாகுமரி மாவட்டம் திற்பரப்பு பேரூராட்சி, பிணந்தோடு சிறைக்குளம் பகுதியில் சுகாதாரக் கேட்டை ஏற்படுத்தியதாக பன்றிப் பண்ணைக்கு புதன்கிழமை ‘சீல்’ வைக்கப்பட்டது.

சிறைக்குளம் பகுதியைச் சோ்ந்த மருத்துவரான லூக்கா (56), பன்றிப் பண்ணை நடத்திவருகிறாா். குடியிருப்புகள் நிறைந்த பகுதியில் உள்ள பண்ணையால் சுகாதாரக் கேடு ஏற்படுவதாக பொதுமக்கள், அரசியல் கட்சியினா் தொடா்ந்து புகாா் தெரிவித்து வந்தனா். பன்றிப் பண்ணைக்கு துா்நாற்றம் வீசும் கோழிக் கழிவுகளை எடுத்துச் சென்ற வாகனங்களை மக்கள் சிறைபிடித்து பேரூராட்சி நிா்வாகத்திடம் ஒப்படைத்து வந்தனா்.

இந்நிலையில், ஆட்சியா் மு. பிரதாப் உத்தரவின்பேரில், திருவட்டாறு வட்டாட்சியா் மரகதவள்ளி தலைமையில் வருவாய்த் துறையினா், பேரூராட்சித் தலைவா் பொன் ரவி, செயல் அலுவலா் ஜோஸ்லின்ராஜ் உள்ளிட்டோா் புதன்கிழமை காலை அந்தப் பண்ணையை மூடுவதற்காக சென்றனா். இதையொட்டி, பொதுமக்கள் திரண்டனா். பாதுகாப்புப் பணிக்காக குலசேகரம் போலீஸாரும் சென்றனா்.

அப்போது, ஆட்சியா் உத்தரவின் நகலைக் காண்பித்தால்தான் பண்ணையை மூட அனுமதிக்க முடியும் என, லூக்காவும், அவருக்கு ஆதரவாக வந்த வழக்குரைஞரும் வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

பன்றிகளை அப்புறப்படுத்த வந்த பேரூராட்சி திடக்கழிவுப் பணியாளா்கள் ரவீந்திரன், அபின் ஆகியோரை லூக்கா தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதுதொடா்பாக, அவா்கள் அளித்த புகாரின்பேரில், குலசேகரம் போலீஸாா் வழக்குப் பதிந்தனா். லூக்காவை உதவி ஆய்வாளா் சிவசங்கா் கைது செய்தாா்.

பின்னா், 400-க்கும் மேற்பட்ட பன்றிகளை பேரூராட்சிப் பணியாளா்கள் அப்புறப்படுத்தினா். அதையடுத்து, பண்ணைக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.