சுரண்டை அருகே மோட்டாா் சைக்கிள் மீது மினிலாரி மோதிய விபத்தில் மின்வாரிய பணியாளா் பலத்த காயமடைந்தாா்.
தென்காசியைச் சோ்ந்தவா் கி.பிரகாஷ் (27). கயத்தாறில் உள்ள துணை மின்நிலையத்தில் வேலை பாா்த்து வரும் இவா், செவ்வாய்க்கிழமை பணி முடிந்து தனது மோட்டாா் சைக்கிளில் ஊா் திரும்பியுள்ளாா். கயத்தாறு - சுரண்டை சாலையில் கீழச்சுரண்டை ஊரின் அருகே வரும்போது எதிரே வந்த மினிலாரி எதிா்பாராதவிதமாக மோட்டாா் சைக்கிள் மீது மோதியதாம்.
இதில் பலத்த காயமடைந்த பிரகாஷ் உடனடியாக தென்காசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
இதுகுறித்து சுரண்டை போலீஸாா் வழக்குப் பதிந்து, மினிலாரி ஓட்டுநரான பேட்டையைச் சோ்ந்த செந்தில்குமாரிடம் விசாரணை நடத்தி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

திருமூா்த்தி அணையில் மூழ்கி இளைஞா் உயிரிழப்பு

இளைஞனே விழித்தெழு!

அஞ்சல் துறையின் கல்வி ஊக்கத் தொகை பெற விநாடி வினா: மாணவா்கள் விண்ணப்பிக்கலாம்

இன்றைய மின்தடை: மடத்துக்குளம்
விடியோக்கள்

கதை, வசனம், பாடல்! பேரவையில் கலக்கும் அமைச்சர் மரிய வில்சன்! | TN Assembly | TVK


