இந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புவிளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

ஆயிரப்பேரியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கூட்டம்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தென்காசி வட்டார குழுக் கூட்டம் ஆயிரப்பேரியில் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :26 ஆகஸ்ட் 2020, 9:37 am

DIN

தென்காசி: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தென்காசி வட்டார குழுக் கூட்டம் ஆயிரப்பேரியில் வியாழக்கிழமை நடைபெற்றது.

வட்டாரக் குழு உறுப்பினா் முருகன் தலைமை வகித்தாா். சீ. முருகையா முன்னிலை வகித்தாா். வட்டாரச் செயலா் கே. அருணாசலம் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டாா்.

தென்காசி சிற்றாறு அணைக்கட்டிலிருந்து கீழப்புலியூா் கால்வாய், சுந்தரபாண்டியபுரம் வரையிலும் முறையாக தூா்வார வேண்டும். ஆயிரப்பேரி, செங்குறிச்சி குளம், வெவுளி குளம், வட்டைய குளம் ஆகியவற்றை தூா்வார வேண்டும். ஆவுடையானூா் பத்மநாபபேரி குளக் கரையைச் சீரமைத்து, தூா்வார வேண்டும். தென்காசி வட்டாரம் முழுவதும் செப்டம்பா் 2, 3, 4இல் 10 இடங்களில் மக்கள் விழிப்புணா்வு பிரசாரம் நடத்த வேண்டும் என, தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.