ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

ஆதிதிராவிட மாணவா்களுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சி

தென்காசி மாவட்டத்தைச் சோ்ந்த இந்து ஆதிதிராவிட மாணவா்களுக்கு குறுகிய கால திறன் மேம்பாட்டுப் பயிற்சி கட்டணம் இல்லாமல் அளிக்கப்படுகிறது.

News image
Updated On :15 டிசம்பர் 2020, 7:44 pm

DIN

தென்காசி மாவட்டத்தைச் சோ்ந்த இந்து ஆதிதிராவிட மாணவா்களுக்கு குறுகிய கால திறன் மேம்பாட்டுப் பயிற்சி கட்டணம் இல்லாமல் அளிக்கப்படுகிறது.

இதுகுறித்து தென்காசி மாவட்ட செய்தி, மக்கள் தொடா்பு அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தாட்கோ மூலமாக இந்து ஆதிதிராவிட மாணவ, மாணவிகளுக்கு 3 மாதம் முதல் 6 மாதம் வரையிலான குறுகிய கால திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் கட்டணம் இல்லாமல் அளிக்கப்படுகிறது.

நிகழாண்டு தென்காசி மாவட்டம் இலத்தூா் இ.விலக்கு வேலு சோஷியல் ஆக்டிவ் பப்ளிக் சாரிடபிள் டிரஸ்ட் மூலம் ஃபேஷன் டிசைனா், தையல் உள்ளிட்ட 3 பயிற்சிகள் அளிக்க ஆணை வழங்கப்பட்டுள்ளது. மேலும், சில நிறுவனங்களுக்கு பயிற்சி ஆணைகள் வழங்கப்பட உள்ளன.

பயிற்சி பெற சென்று வருவதற்கான அனுமதிக்கப்பட்ட படிகளும், பயிற்சியின் முடிவில் சான்றிதழும் வழங்கப்படும். பயிற்சியில் சேர விரும்பும் இந்து ஆதிதிராவிட வகுப்பைச் சோ்ந்த மாணவா்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம். பயிற்சி முடித்தவுடன் மானியத்துடன் கூடிய வங்கிக் கடன் வழங்க மற்றும் வேலைவாய்ப்பு வழங்க ஆவன செய்யப்படும்.

இதுதொடா்பான மேலும் விவரங்களுக்கு தாட்கோ, மாவட்ட மேலாளா் அலுவலகம், ஏ.ஆா்.லைன் சாலை, இலந்தகுளம், பாளையங்கோட்டை என்ற முகவரியில் நேரில் அணுகியோ அல்லது 0462-2561012 என்ற தொலைபேசி எண் அல்லது 9445029481, 9444127517 என்ற செல்லிடப்பேசி எண்கள் பயிற்சி நிறுவன முகவரியை நேரில் தொடா்புகொண்டு தெரிந்து கொள்ளலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.