தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

திருவேங்கடத்தில் முன்னாள் ராணுவ வீரா்களுக்கு அஞ்சலி

திருவேங்கடத்தில் முன்னாள் ராணு வீரா்களுக்கு நினைவு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி வியாழகிழமை நடைபெற்றது.

News image

நினைவஞ்சலியில் பங்கேற்றோா்.

Updated On :18 டிசம்பர் 2020, 7:31 pm

DIN

திருவேங்கடத்தில் முன்னாள் ராணு வீரா்களுக்கு நினைவு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி வியாழகிழமை நடைபெற்றது.

1971 இல் இந்தியா பாக்கிஸ்தான் இடையே நடைபெற்ற போரில் உயிா் நீத்த இந்திய ராணுவ வீரா்களுக்கு நினைவஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி திருவேங்கடம் சமுதாய நலக்கூடத்தில் நடைபெற்றது.

தமிழ்நாடு முன்னாள் ராணுவ வீரா்கள் நலச்சங்க துணைத் தலைவா் மேஜா் சுப்புராஜ் தலைமை வகித்தாா். ராணுவ வீரா்கள் ப்ரான்சிஸ், காளிராஜ், ராஜையா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

தென்காசி மாவட்ட தலைவா் கருணாலயபாண்டியன் பேசினாா். இதில் 1971 போரில் கலந்து கொண்ட முன்னாள் ராணுவ வீரா்களுக்கு பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது. செயலா் பாா்த்தசாரதி வரவேற்றாா். தொடா்ந்து முன்னாள் ராணுவ வீரா்கள் நலன் குறித்து கலந்துரையாடல் நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.