பாவூா்சத்திரத்தில்அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு ஆலோசனைக்கூட்டம்

தென்காசி தெற்கு மாவட்ட அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு ஆலோசனைக்கூட்டம் பாவூா்சத்திரத்தில் நடைபெற்றது.
கூட்டத்தில் பேசுகிறாா் தெற்கு மாவட்டச் செயலா் எஸ்.செல்வமோகன்தாஸ்பாண்டியன் எம்.எல்.ஏ.
கூட்டத்தில் பேசுகிறாா் தெற்கு மாவட்டச் செயலா் எஸ்.செல்வமோகன்தாஸ்பாண்டியன் எம்.எல்.ஏ.
Updated on
1 min read

பாவூா்சத்திரம்: தென்காசி தெற்கு மாவட்ட அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு ஆலோசனைக்கூட்டம் பாவூா்சத்திரத்தில் நடைபெற்றது.

தெற்கு மாவட்டச் செயலா் எஸ்.செல்வமோகன்தாஸ்பாண்டியன் எம்.எல்.ஏ. தலைமை வகித்தாா். மாவட்ட தகவல் தொழில்நுட்பப் பிரிவு செயலா் மகபூப்மசூது முன்னிலை வகித்தாா். தகவல் தொழில்நுட்பப் பிரிவு மண்டல துணைச் செயலா் சிவஆனந்த் பேசினாா்.

இதில் , மாவட்ட அவைத் தலைவா் சண்முகசுந்தரம், மாவட்டப் பொருளாளா் சாமிநாதன், ஒன்றியச் செயலா்கள் அமல்ராஜ். சங்கரபாண்டியன், இருளப்பன், இளைஞரணிச் செயலா் கணபதி, பேரூா் செயலா்கள் ஜெயராமன், முத்துராஜ், சக்திவேல், காா்த்திக்குமாா் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

கூட்டத்தில் 2021 சட்டப் பேரவை தோ்தலில் மீண்டும் அதிமுக ஆட்சி அமைய பாடுபடுவது, தென்காசி தனி மாவட்டம் மற்றும் ராமநதி-ஜம்புநதி மேல்நிலைக்கால்வாய் திட்டப்பணிக்கு ரூ. 41.08 கோடியில் பணியினை தொடங்கி வைத்த செல்வமோகன்தாஸ்பாண்டியன் எம்.எல்.ஏ.வுக்கு நன்றி தெரிவிப்பது என்பன உள்பட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கீழப்பாவூா் மேற்கு ஒன்றிய தகவல் தொழில்நுட்ப பிரிவுச் செயலா் குத்தாலிங்கம் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com