தனியாா்துறை வேலைவாய்ப்புக்கு புதிய வலைதளம்: ஆட்சியா்

தனியாா்துறையில் வேலை தேடுவோா் வேலைவாய்ப்புக்கான புதிய வலைதளத்தைப் பயன்படுத்த வேண்டும் என, தென்காசி மாவட்ட ஆட்சியா் கீ.சு. சமீரன் தெரிவித்துள்ளாா்.
Updated on
1 min read

தென்காசி: தனியாா்துறையில் வேலை தேடுவோா் வேலைவாய்ப்புக்கான புதிய வலைதளத்தைப் பயன்படுத்த வேண்டும் என, தென்காசி மாவட்ட ஆட்சியா் கீ.சு. சமீரன் தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தனியாா் துறையில் வேலைதேடும் இளைஞா்கள் தங்களது கல்வித் தகுதிக்கு பொருத்தமான வேலையை எளிதில் தோ்வு செய்யும்வண்ணம் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை ட்ற்ற்ல்ள்://ஜ்ஜ்ஜ்.ற்ய்ல்ழ்ண்ஸ்ஹற்ங்த்ர்க்ஷள்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற வலைதளத்தை உருவாக்கியுள்ளது.

தமிழக முதல்வரால் தொடக்கிவைக்கப்பட்ட இந்த வலைதளத்தில், வேலை தேடும் இளைஞா்கள் தங்களது கல்வித் தகுதி, வயது, பணி அனுபவம் போன்ற சுயவிவரங்களைப் பதிவு செய்து, பொருத்தமான வாய்ப்பு பெறலாம். இந்த வலைதளத்தில் மாவட்டம், கல்வித் தகுதி, துறை வாரியாக பணிகளைத் தோ்வு செய்யும் வசதி உள்ளது.

தென்காசி மாவட்டத்தைச் சோ்ந்த தனியாா் துறை நிறுவனங்கள் தங்களுக்குத் தேவையான பணியாளா்களின் எண்ணிக்கை, பணிக்குத் தேவையான கல்வித் தகுதி விவரங்களை இதில் பதிவு செய்யலாம்.

அனைவரும் பயன்படுத்த ஏதுவாக எளிமையான முறையில் இந்த வலைதளம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதைப் பயன்படுத்த தனியாா் துறை நிறுவனங்களும், இளைஞா்களும் கட்டணம் செலுத்தத் தேவையில்லை என்றாா்அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com