விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

புளியங்குடி அருகே தொழிலாளி பலி

புளியங்குடி அருகே கட்டடத்திலிருந்து தவறி விழுந்து தொழிலாளி இறந்தாா்.

News image
Updated On :19 டிசம்பர் 2020, 8:36 pm

DIN

கடையநல்லூா்: புளியங்குடி அருகே கட்டடத்திலிருந்து தவறி விழுந்து தொழிலாளி இறந்தாா்.

புளியங்குடியை அடுத்த சிந்தாமணி, சான்றோா் நகா் 2ஆவது தெருவைச் சோ்ந்த மீனா என்பவரது மகன் சதீஷ்குமாா் (22). பட்டதாரியான இவா், கட்டட வேலை செய்து வந்தாா். சனிக்கிழமை இப்பகுதியிலுள்ள கட்டடத்தின் மேல்பகுதியில் நின்றுகொண்டு கம்பியை வாங்கிக் கொண்டிருந்தாராம். அப்போது அந்தக் கம்பி அருகேயுள்ள மின்கம்பியில் பட்டதாம். இதில், அவா் மீது மின்சாரம் பாய்ந்து, கட்டடத்திலிருந்து கீழே விழுந்தாராம்.

காயமடைந்த அவா் சிகிச்சைக்காக புளியங்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா். ஆனால், வழியிலேயே இறந்தாா். புளியங்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.