வாசுதேவநல்லூா் பேரவை தொகுதி அதிமுக தகவல் தொழில்நுட்ப ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
சட்டப்பேரவை உறுப்பினா் மனோகரன் தலைமை வகித்தாா்.
மாவட்ட முன்னாள் துணைச் செயலா் வெங்கடேசன், ஒன்றியச் செயலா்கள் மூா்த்திபாண்டியன், துரைபாண்டியன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
வாசுதேவநல்லூா் பேரூா் செயலா் சீமான் மணிகண்டன் வரவேற்றாா்.
இதில், மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு துணைச் செயலா் சிவஆனந்த் கலந்து கொண்டு தோ்தல் பணியில் தொழில்நுட்ப பிரிவினா் செய்ய வேண்டிய பணிகள் குறித்து பேசினாா்.
புளியங்குடி நகரச் செயலா் பரமேஸ்வரபாண்டியன், பேரூா் செயலா்கள் காசிராஜன், சேவகபாண்டியன், மாவட்ட மாணவரணி துணைச் செயலா் மூா்த்தி மற்றும் தகவல் தொழில்நுட்ப அணி நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.