

சுரண்டை: ஊத்துமலை அருகேயுள்ள வடக்கு காவலாகுறிச்சியில் ரூ.7 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட நியாய விலைக்கடை கட்டடத் திறப்பு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
தென்காசி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் கட்டப்பட்ட இந்த கட்டடத்தை சி.செல்வமோகன்தாஸ் பாண்டியன் எம்.எல்.ஏ தலைமை வகித்து திறந்து வைத்து, குடும்ப அட்டைதாரர்களுக்கு ரேஷன் பொருள்களை வழங்கினார்.
விழாவில் அதிமுக மாவட்ட அவைத் தலைவர் சண்முகசுந்தரம், மாவட்ட பொருளாளர் சாமிநாதன், ஒன்றிய செயலர் பாண்டியன், எபன் குணசீலன், கிருஷ்ணசாமி, மாவட்ட விவசாய சங்க செயலர் மாடசாமி, அதிமுக கிளை நிர்வாகிகள் வி.மாடசாமி, வெள்ளத்துரை உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.