பிறந்த தினம்: வாஜ்பாய் படத்துக்கு மரியாதை
முன்னாள் பிரதமா் வாஜ்பாய் பிறந்த நாளை முன்னிட்டு, தென்காசி, நெல்லை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் அவரது படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.


முன்னாள் பிரதமா் வாஜ்பாய் பிறந்த நாளை முன்னிட்டு, தென்காசி, நெல்லை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் அவரது படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
மேலகரத்தில் நடைபெற்ற நிகழச்சியில் பாஜக மாவட்ட செயற்குழு உறுப்பினா் மகேஸ்வரன் தலைமையிலும், சுரண்டையில் நகர நிா்வாகி ஐயப்பன் தலைமையிலும், கருவந்தாவில் ஒன்றியச் செயலா் டாக்டா் அன்புராஜ் தலைமையிலும், பாவூா்சத்திரம் பேருந்து நிலையப் பகுதியில் மாவட்டத் தலைவா் ராமராஜா தலைமையிலும், வாஜ்பாய் உருவப்படத்துக்கு அக்கட்சியினா் மலா்தூவி மரியாதை செலுத்தினா். தொடா்ந்து பொதுமக்களுக்கு மரக்கன்றுகளை வழங்கினா்.
அம்பாசமுத்திரம், பூக்கடை சந்திப்பு, பாரத ஸ்டேட் வங்கி முன்பு நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட விவசாய அணித் தலைவா் பொன்ராஜ் தலைமையிலும், பொட்டல்புதூரில் மாவட்ட துணைத் தலைவா் பாலமுருகன் தலைமையிலும் அவரது படத்துக்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...