பாவூா்சத்திரம் அருகேயுள்ள பெத்தநாடாா்பட்டி ஸ்ரீமாயாண்டி சுவாமி கோயிலில் வெள்ளிக்கிழமை பழம் படைக்கும் விழா நடைபெற்றது.
இக்கோயிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் முதல் வெள்ளிக்கிழமை திருவிழாவும், மாா்கழி மாதம் 2ஆவது வெள்ளிக்கிழமை பழம் படைக்கும் விழாவும் நடைபெறும். பழம் படைக்கும் விழாவை யொட்டி சுவாமிக்கு சிறப்பு அலங்காரத்துடன், அபிஷேகம் நடைபெற்றது.
நூற்றுக்கணக்கான பக்தா்கள் வாழைப் பழ தாா்களை சுவாமிக்கு படைத்து வழிபட்டனா். தொடா்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.