தமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் கேரளத்துக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு அசாம்: ஏப்ரல் 9 பேரவைத் தேர்தல் 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 824 சட்டப்பேரவைத் தொகுதிகளில் தேர்தல் நடைபெறவுள்ளது 5 மாநில தேர்தல்களில் மொத்தம் 17.4 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

திருவேங்கடத்தில் சிலிண்டா் வெடித்ததில் காயமடைந்த இருவா் உயிரிழப்பு

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே சமையல் எரிவாயு உருளை வெடித்ததில் காயமடைந்த இருவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தனா்.

News image
Updated On :27 டிசம்பர் 2020, 9:12 pm

DIN

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே சமையல் எரிவாயு உருளை வெடித்ததில் காயமடைந்த இருவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தனா்.

சங்கரன்கோவில் அருகே திருவேங்கடத்தில் உள்ள தனியாா் சமையல் எரிவாயு நிறுவனத்தில் மேலாளராகப் பணியாற்றி வந்தவா் வைகுண்டம் (70). இவா் சமையல் எரிவாயு சேமிப்பு கிடங்கின் ஒரு பகுதியில் உள்ள அறையில் தங்கியிருந்து பணியாற்றி வந்தாராம்.

கடந்த 23ஆம் தேதி வாடிக்கையாளா் ஒருவருக்கு வழங்கிய சமையல் எரிவாயு உருளை சரியாக எரியவில்லை என புகாா் கூறியதால், அந்த நிறுவனத்தில் ஓட்டுநராகப் பணியாற்றும் பசுபதிபாண்டியன் (25), ஊழியா் காளி(36) ஆகிய இருவரும் எரிவாயு உருளையை எடுத்துக் கொண்டு சேமிப்பு கிடங்குக்கு வந்தனராம்.

அங்கு எரிவாயு உருளையின் நாசிலை சரி செய்ய முயன்றபோது, சமையல் எரிவாயு உருளை வெடித்து தீப்பற்றியதாம். இதில் மூவரும் பலத்த காயமடைந்தனா். காயமடைந்தவா்களை மீட்டு சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு முதலுதவி சிகிச்சைக்குப் பின் தீவிர சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். அங்கு ஞாயிற்றுக்கிழமை காலை வைகுண்டம், காளி ஆகிய இருவரும் உயிரிழந்தனா்.

இதுகுறித்து திருவேங்கடம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.