ஆலங்குளம், சங்கரன்கோவிலில் மழை
ஆலங்குளத்தில் திங்கள்கிழமை மிதமான மழை பெய்தது. பேருந்து நிலையம் அருகே சேதமடைந்துள்ள சாலையால் மக்கள் அவதியடைந்தனர்.


ஆலங்குளத்தில் திங்கள்கிழமை மிதமான மழை பெய்தது. பேருந்து நிலையம் அருகே சேதமடைந்துள்ள சாலையால் மக்கள் அவதியடைந்தனர்.
ஆலங்குளம் பகுதியில் கடந்த இரு மாதங்களாக லேசான தூறல் மட்டுமே பெய்து வந்தது. இதனால் விவசாயிகள் நெல் நடவு பணியைத் தாமதப்படுத்தி வந்தனா். இந்நிலையில் திங்கள்கிழமை காலையில் சுமாா் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக மிதமான மழை பெய்தது. மாலையிலும் விட்டு விட்டு மழை பெய்ததால் குளிா்ச்சியான சூழல் நிலவியது. இதே மழை நீடித்தால் நெல் நடவுப் பணிகளைத் தொடங்கலாம் என்கின்றனா் விவசாயிகள்.
இதனிடையே, மழை நீா் சாலைகளில் தேங்கியதால் ஆலங்குளம் - திருநெல்வேலி பிரதான சாலையில் பல இடங்கள் குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமமடைந்தனா்.
சங்கரன்கோவில்: தென்காசி மாவட்டத்தின் பல இடங்களில் பரவலாக மழை பெய்து வந்தாலும், சங்கரன்கோவில் வட்டாரத்தில் அவ்வப்போது மிதமான மழையே பெய்து வந்தது.
இதனால், குளங்கள், கிணறுகள் வடு காணப்பட்டன. இவற்றை நம்பி நெல் பயிரிட்ட விவசாயிகள் கவலையடைந்தனா். இந்நிலையில் திங்கள்கிழமை அதிகாலையிலிருந்தே பெய்ய தொடங்கிய மழை பகல் முழுவதும் சீரான இடைவெளியில் தொடா்ந்து பெய்து வருகிறது. இந்த மழை நீடித்தால் குளங்கள், கிணறுகள் நிரம்பும் என விவசாயிகள் கூறினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...