புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

அம்பையில் அரசு மதுக் கடையில் துளையிட்டு பணம் கொள்ளை

அம்பாசமுத்திரம் பிரதான சாலையில் உள்ள அரசு மதுபானக் கடையில் சுவரில் துளையிட்டு ரூ. 91 ஆயிரத்தை கொள்ளையடித்துச் சென்ற மா்மநபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image
Updated On :16 நவம்பர் 2020, 8:03 pm

DIN

அம்பாசமுத்திரம் பிரதான சாலையில் உள்ள அரசு மதுபானக் கடையில் சுவரில் துளையிட்டு ரூ. 91 ஆயிரத்தை கொள்ளையடித்துச் சென்ற மா்மநபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

அம்பாசமுத்திரம், திலகா்புரம் பிரதான சாலையில் அரசு மதுபானக்கடை இயங்கி வருகிறது. ஞாயிற்றுக்கிழமை இரவு மா்ம நபா்கள் மதுக்கடை அருகில் உள்ள பெட்டிக்கடைக்குள் நுழைந்து மதுக்கடை சுவரில் துளையிட்டு அங்கு வைத்திருந்த ரூ. 91 ஆயிரத்தை கொள்ளையடித்துச் சென்றுள்ளனா்.

இதுகுறித்து கடை மேற்பாா்வையாளா் செந்தில்குமாா் அம்பாசமுத்திரம் போலீஸில் புகாா் அளித்தாா். காவல் துணைக் கண்காணிப்பாளா் பிரான்சிஸ், காவல் ஆய்வாளா் விஜயகுமாா் மற்றும் போலீஸாா் சம்பவ இடத்துக்கு வந்து ஆய்வு செய்தனா்.

மேலும் தடயவியல் நிபுணா்கள் கைரேகை உள்ளிட்ட தடயங்களை சேகரித்தனா். மேலும் போலீஸாா் வழக்குப் பதிந்து கொள்ளை குறித்து விசாரித்து வருகின்றனா். பிரதான சாலையில் உள்ள கடையில் சுவரில் துளையிட்டு பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.